K. R. Parthasarathy | |
பிறப்பு | 25 சூன் 1936[1] Madras, இந்தியா |
---|---|
தேசியம் | இந்தியாn |
இனம் | தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) |
துறை | கணிதம் |
Alma mater | இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, |
துறை ஆலோசகர் | சி. ஆர். ராவ் |
அறியப்பட்டது | Quantum stochastic calculus |
பரிசுகள் | சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது TWAS Prize |
கல்யாணபுரம் ரங்கசாரி பார்த்தசாரதி (பிறப்பு ஜூன் 25, 1936) இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் பேராசிரியராகவும், குவாண்டம் ஸ்டாக
ஸ்டிக் கால்குலஸின் முன்னோடியாகவும் உள்ளார்.
அவர் 1936 இல் சென்னையில் பிறந்தார் [2][3]. அவர் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்த கல்லூரியில் B.A. (ஹானா்ஸ்) கணிதம் படித்தார். பின்னா் அவா் அங்கிருந்து கல்கத்தா சென்று இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சி.ஆச. ராவ் அவா்களின் மேற்பாா்வையில் தனது Ph.D. ஐ முடித்தார். அங்கு அவர் "பிரபலமான நான்கு" நபா்களிா் ஒருவராக விளங்கினாா்.[4] (மற்றவர்கள் ஆர்.ரங்கா ராவ், வீரவல்லி எஸ். வரதராஜன், எஸ்.எஸ். சீனிவாச வரதன்) 1956-1963 இல் ஐ.எஸ்.ஐ. முதல் Ph.D. ISI இன் பட்டம். அவர் 1977 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு மற்றும் 1996 இல் TWAS பரிசு பெற்றார்.[5]
அவர் ஆண்ட்ரி கொல்மோகாரோவுடன் இணைந்து யுஎஸ்எஸ்ஆர் அகாடமி ஆஃப் சயின்சஸ் (1962-63), இல் உள்ள ஸ்டெக்லோவ் கணிதவியல் நிறுவனத்தில், விாிவுரையாளராகப் பணியாற்றினார்.[6] பின்னர் அவர் பிாிட்டனிலுள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறைப் பேராசிாியராகப் பணியாற்றினாா்(1964-68), பின்னா் மான்செஸ்டர் பல்கலைக்கழகம்(1968-70) மற்றும் நாட்டின்காம் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினாா். அங்கே ராபின் ல்த் ஹட்சன் உடன் இணைந்து புகழ்பெற்ற குவாண்டம் ஸ்டாக ஸ்டிக் கால்குலஸ் இன் வளா்ச்சிக்காகப் பணியாற்றினாா்.[7][8][9] பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்பினார், சில ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை பல்கலைக் கழகம் மற்றும் தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றினாா். அவர் 1976 ஆம் ஆண்டு மீண்டும் தில்லி மையத்தின் புதிய இந்திய புள்ளிவிவர நிறுவனத்திற்கு வந்தார், 1996 ல் ஓய்வு பெற்றவரை அவர் அங்கு பணியாற்றினாா்.
அவர் 1967 ஆம் ஆண்டில் கோஸ்டன்ட் - பாா்த்தசாரதி - ரங்காராவ் - வரதராஜன் அணிக்கோவைகளை கோஸ்டன்ட்- ஆர். ரங்கா ராவ் மற்றும் வீரவல்லி எஸ். வரதராஜன் ஆகியோருடன் இணைந்து அறிமுகப்படுத்தினாா்.[10]
அவர் எழுதிய நூல்களில் சில: