சர்தார் கே. எம். பணிக்கர் | |
---|---|
பிரான்சுக்கான இந்தியத் தூதர் | |
பதவியில் 1956-1959 | |
முன்னையவர் | ஆர்தித் மாலிக் |
பின்னவர் | என். இராகவன் |
எகிப்திற்கான இந்தியத் தூதர் | |
பதவியில் 1952-1954 | |
முன்னையவர் | ஆசப் அலி அசுகர் பைசி |
பின்னவர் | அலி யவர் ஜங் |
சீனாவிற்கான இந்தியத் தூதர் | |
பதவியில் 20 மே 1950 – 12 செப்டம்பர் 1952 | |
பின்னவர் | என். இராகவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருவிதாங்கூர், பிரித்தனிய இந்தியா (நவீன கேரளம், இந்தியா) | 3 சூன் 1895
இறப்பு | 10 திசம்பர் 1963 மைசூர், கருநாடகம், இந்தியா | (அகவை 68)
முன்னாள் மாணவர் | சென்னை கிறித்துவக் கல்லூரி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
பணி | புதின ஆசிரியர், பத்திரிகையாளர், வரலாற்றாசிரியர், நிர்வாகி, இராஜதந்திரி |
காவலம் மாதவா பணிக்கர் (Kavalam Madhava Panikkar) (3 ஜூன் 1895 - 10 டிசம்பர் 1963) [1][2] இவர் ஓர் இந்திய அரசியல் பிரமுகரும், அரசு தூதரும் ஆவார். மேலும் பேராசிரியர், செய்தித்தாள் ஆசிரியர், வரலாற்றாசிரியர், புதின ஆசிரியர் என்று பன்முக ஆளுமைமிக்கவராக விளங்கினார்.[3] பிரித்தானிய இந்தியப் பேரரசில் ஒரு சுதேச மாநிலமான திருவிதாங்கூரில் பிறந்த இவர் மெட்ராஸிலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1925 இல் இந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியரானார். பின்னர், அவர் சேம்பர் ஆஃப் பிரின்சஸின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து பாட்டியாலா மாநிலத்திற்கும் பின்னர் பிகானேர் மாநிலத்திற்கும் வெளியுறவு அமைச்சராக செயல்ப்பட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 1947 ஐ.நா பொதுச் சபையின் அமர்வில் சர்தார் மாதவ பானிக்கர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின் 1950 ல், இவர் சீனாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். பணியில் வெற்றிகரமான செயல்பாடுகளால் பதவிக்காலத்திற்குப் பிறகு 1952 இல் எகிப்து நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கபட்டு எகிப்து சென்றார். மேலும் இவர் 1953 இல் அமைக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். பின்பு இவர் பிரான்ஸ்க்கான இந்தியாவின் தூதராகவும், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். கூடுதலாக காஷ்மீர் பல்கலைக்கழகம் மற்றும் மைசூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
மாதவ பணிக்கர் 1895 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் புத்திலத்து பரமேஸ்வரன் நம்பூதிரி மற்றும் சலாயில் குஞ்சிகுட்டி குஞ்சம்மா [4] ஆகியோருக்குப் மகனாக பிறந்தார். தனது ஆரம்ப பள்ளிகல்வியை கோட்டயம் சி.எம்.எஸ் கல்லூரி பள்ளி மற்றும் சென்னை பால்ஸ் பள்ளி, வேப்பேரியில் பயின்றார்.
பின்னர் இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இடைநிலை வகுப்புகளுக்கு சேர்ந்தார். எம்.சி.சி யில் அவர் புதேஷாத் ராமன் மேனன், நந்தியேலத் பத்மநாப மேனன் மற்றும் சதாசிவ ரெட்டி ஆகியோரின் சமகாலத்தவராக இருந்தார்.
வரலாற்று படிப்பை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்காக ஏப்ரல் 1914 இல் இங்கிலாந்து சென்றார். பிறகு அங்கு படிப்பை முடித்த பணிக்கர் இலண்டனின் மிடில் டெம்பில் சட்டபடித்தை படித்து முடித்தார்.
தனது படிப்பை முடித்த பணிக்கர் பிறகு போர்த்துக்கல் மற்றும் ஆலந்து நாடுகள் மலபாருடன் இருந்த ஈடுபாட்டை ஆய்வு செய்ய போர்ச்சுகல் மற்றும் ஆலந்துக்குச் பயணித்தார். தனது ஆய்வின் முடிவுகளை "மலபார் மற்றும் போர்த்துகீசியம்" (1929) மற்றும் "மலபார் மற்றும் டச்சு" (1931) என்ற இரு புத்தகமாக வெளியிட்டார். மேலும் பணிக்கர் கேரள சாகித்ய அகாடமியின் முதல் தலைவராக இருந்தார்.[5] புகழ்பெற்ற கவிஞரும், நாடக ஆசிரியரும், பாடலாசிரியருமான காவலம் நாராயண பணிக்கருக்கு இவர் தாய்மாமன் ஆவார்.
]]
படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பணிக்கர் முதலில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும்பேராசிரியராக பணி செய்தார். பிறகு. இந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியராக 1925 இல் பத்திரிகை துறைக்கு திரும்பினார்.
ஆங்கிலத்தில் எழுதிய குறிப்பிடத்தக்கப் படைப்புகள்: