கே. ஏ. தங்கவேலு | |
---|---|
பிறப்பு | காரைக்கால் அருணாசலம் தங்கவேலு 15 சனவரி 1917 காரைக்கால், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | செப்டம்பர் 28, 1994 சென்னை, தமிழ்நாடு | (அகவை 77)
பணி | நடிகர், பாடகர் |
வாழ்க்கைத் துணை | டி. ராஜாமணி, எம். சரோஜா |
கா. அ. தங்கவேலு (K. A. Thangavelu)(இறப்பு: 28 செப்டம்பர், 1994[1]) 1950 முதல் 1970 வரை தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகராவார். டணால் தங்கவேலு என்று பரவலாக அழைக்கப்படுபவர். இவருடைய துணைவியார், எம். சரோஜாவுடன் இணைந்து நடித்த கல்யாண பரிசு திரைப்படம் புகழ்பெற்றது. இவர் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள், இவரை மேலும் புகழ் பெறச் செய்தது.
நடிகர் கே. ஏ. தங்கவேலுவும், எம். சரோஜாவும் இணையராக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ஆம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தனர்.