கே. கே. நகர், திருச்சி K. K. Nagar, Trichy | |
---|---|
ஆள்கூறுகள்: 10°45′13.7″N 78°41′42.4″E / 10.753806°N 78.695111°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஏற்றம் | 117 m (384 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண்கள் | 620021, 620007 |
தொலைபேசி குறியீடு | +91431xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | சாத்தனூர், பஞ்சப்பூர், பிராட்டியூர் |
மாநகராட்சி | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி |
இணையதளம் | https://tiruchirappalli.nic.in |
கலைஞர் கருணாநிதி நகர் அல்லது கே. கே. நகர் (K. K Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,[1][2][3][4][5] 10°45'13.7"N, 78°41'42.4"E (அதாவது, 10.753800°N, 78.695100°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 117 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், கே. கே. நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே அமைந்து பயனளிக்கிறது. சாத்தனூர், பஞ்சப்பூர், பிராட்டியூர் ஆகியவை கே. கே. நகருக்கு அருகிலுள்ள முக்கியமான ஊர்களாகும்.
கே. கே. நகர் பகுதிக்கு, திருச்சிராப்பள்ளி மாநகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன. மத்திய பேருந்து நிலையம் சுமார் 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் சத்திரம் பேருந்து நிலையம் உள்ளது. கே. கே. நகர் பகுதியிலிருந்து ஓலையூர் பகுதி வரை மகளிருக்கான இலவச பேருந்து சேவைகளுடன், காலை முதல் மாலை வரை மொத்தம் எட்டு முறை இருபுறமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[6] முக்கியமான தொடருந்து நிலையமான திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம், கே. கே. நகர் பகுதியிலிருந்து சுமார் 7.5 கி.மீ. தூரத்தில் உள்ளது. சுமார் 6.5 கி.மீ. தொலைவில் பொன்மலை தொடருந்து நிலையம் அமையப் பெற்றுள்ளது.
2020-21 ஆம் கல்வியாண்டுக்கான, முன்னாள் கல்வியமைச்சர் அன்பழகன் பெயரிலான தமிழக அரசின் சிறந்த பள்ளி விருது, கே. கே. நகர் பஞ்சாயத்து ஒன்றிய பள்ளிக்கு வழங்கப்பட்டது.[7]
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மறுசீரமைக்கப்பட்ட, புதிய மற்றும் சுத்தமான காய்கனிகள் விற்பனை செய்யும் கே. கே. நகர் உழவர் சந்தைக்கு தரச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்துள்ளது.[8]