கே. சங்கர் பிள்ளை | |
---|---|
பிறப்பு | காயம்குளம், கேரளா | 31 சூலை 1902
இறப்பு | 26 திசம்பர் 1989 | (அகவை 87)
பணி | கேலிச்சித்திர வரைவாளர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1932–1986 |
அறியப்படுவது | சங்கர்ஸ் வீக்லி குழந்தைகள் புத்தக அறக்கட்டளை (Children's Book Trust) சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் |
விருதுகள் | பத்ம விபூசண் (1976) |
கே. சங்கர் பிள்ளை (ஆங்கிலம்: K. Shankar Pillai, மலையாளம்: കെ. ശങ്കര് പിള്ള) (31 சூலை 1902–26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.[1][2]
கேரளத்தைச் சேர்ந்த காயம்குளத்தில் பிறந்த சங்கர் தம் பள்ளிப் படிப்பை மாவேலிக்கராவிலும் காயம்குளத்திலும் பயின்றார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.
தில்லி பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கிய விருது