Other name | KiTE |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2008 |
முதல்வர் | முனைவர் எம். இராஜேந்திரன் |
அமைவிடம் | , இந்தியா |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் |
இணையதளம் | www |
கே.ஜி.ஐ.எஸ்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ( KGiSL Institute of Technology ), [1] என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், சரவணம்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியை 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் நிறுவனத் தலைவரும் துவக்கியவரும் பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பகவத்சலம், எம்.எஸ்., எஃப்.ஐ.சி.எஸ், எஃப்.சி.சி.பி, எஃப்.ஏ.எம்.எஸ், கே.ஜி. என்பவராவார். இந்தக் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி), தேசிய அங்கீகார வாரியம் (என்.பி.ஏ) ஆகிய ஒப்புதல் அளித்துள்ளன. மேலும் இது கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.
இந்த கல்லூரியானது இளங்கலைப் பொறியியல் (பி.இ) ஐந்து படிப்புகளை வழங்குகிறது.
இளநிலைப் படிப்புகள்
இக்கல்லூரியின் பாடத்திட்டமானது அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதாக உள்ளது.
கல்லூரியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பட்டறைகள், நூலகம், இணைய (24 Mbit / s) இணைப்பு போன்றவை உள்ளன. கல்லூரியில் மாணவர்கள் எளிதாக செயல்பட நவீன இ-கேம்பஸ் அமைப்பு உள்ளது. கற்பிக்கும் பணியியல் உள்ள ஊழியர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் என்றும், நகரத்தில் உள்ள கல்லூரி இது மிகக் கடுமையானது என்றும் அறியப்படுகிறது. வளாகத்தில் உள்ள பாதுகாப்பு முறையானது தனிநபர்கள், மாணவர்கள், பார்வையாளர்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக அறியப்படுகிறது.