கே. ஜி. ஜார்ஜ் | |
---|---|
கே. ஜி. ஜார்ஜ் | |
பிறப்பு | சங்கனாச்சேரி, கேரளம் | 24 மே 1946
இறப்பு | 24 செப்டம்பர் 2023 காக்கநாடு, எர்ணாகுளம், கேரளம், இந்தியா | (அகவை 77)
பணி | திரைப்பட இயக்குனர் |
வாழ்க்கைத் துணை | சல்மா ஜார்ஜ் |
கே. ஜி. ஜார்ஜ் (24 மே 1946 – 24 செப்டம்பர் 2023) ஒரு மலையாள திரைப்பட இயக்குனர் ஆவார். கே. ஜி. ஜோர்ஜ் என்பது குளக்காட்டில் கீவர்கீசு ஜார்ஜ் என்பதைக் குறிக்கும். 1946 ல் கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரியில் பிறந்தவர். 1968-ல் கேரளப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1971-ல் பிலிம் இன்சிடிடியூட்டில் டிப்ளமா பட்டம் பெற்றார். ராமு கார்யாட்டினது உதவியாளராகப் பணியாற்றியவர். நிகழ்கால தேசிய பிரச்சனைகளை முதன்மைப்படுத்திய கதைகளை திரைப்படமாக்கியவர்.