கே .பி .உம்மெர் என்பார் ஒரு பிரபலமான மலையாள நடிகர் ஆவார் .இவர் பெரும்பாலும் வில்லனாகவும் ,குண சித்திர வேடங்களிலும் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார்
கே .பி .உம்மெர், கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் தெக்கோரம் என்னும் ஊரில் முகமது கோயா என்பாருக்கும் ,பீவிக்கும் 11.10.1930-இல் பிறந்த உம்மர் 29.10.2001 அன்று தனது 71-ஆவது அகவையில் சென்னையில் காலமானார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்குமுன் கே.பி.ஏ.சி.நாடகக் குழுவில் நடித்து வந்தார். 1965-இல் எம்.டி-யுடைய முறைப்பெண்ணு படத்தின் மூலம் அறிமுகமானார்.
மலையாளத் திரையுலகில் 1965-1995 காலகட்டத்தில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கோலோச்சிய நடிகர் கே.பி.உம்மர். பெரும்பாலும் நடிகர் பிரேம் நசீரின் படங்களில் அவருக்கு எதிரான கதாபாத்திரங்களில் நடித்தவர். மலையாளத்தில் சுமார் 300 படங்களுக்கு மேல் 30 ஆண்டுகளாய் நடித்தவர் .
உம்மெர் பீச்சாமி என்ற பெண்ணை மணந்தார் . இவருக்கு ரஷீத் ,மொகமது அஸ்ரப் என்கிற இரு மகன்களும் ,மரியம்பி என்ற பெண்ணும் உள்ளனர் .