கே. ரங்கராஜ் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், |
செயற்பாட்டுக் காலம் | 1983 - 1992 |
கே.ரங்கராஜ் (K. Rangaraj) இந்திய திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 1980களில் தமிழ்த் திரைப்படங்களில் தீவிரமாக பங்களித்தார்.
ரங்கராஜ் கோவில்பட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். சென்னையில் வேலை தேடும் போது, கே. பாலசந்தர் இயக்கிய படங்களால் ஈர்க்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சேர முடிவு செய்தார்.[1] எம். ஜி. வல்லபன்னுடன் நட்பு ஏற்பட்டு இயக்குநர் பாரதிராஜாவுக்கு அறிமுகமானார். பல்வேறு படங்களில் பாரதிராஜாவுக்கு உதவச் சென்ற ரங்கராஜ் 1983 இல் நெஞ்சமெல்லாம் நீ என்ற வெற்றித் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் உன்னை நான் சந்தித்தேன் (1984), உதய கீதம் (1985) கீதாஞ்சலி (1985) மற்றும் பாடு நிலாவே (1987) போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார். இருப்பினும் தர்மம் வெல்லும் (1989) மற்றும் இவர் தயாரித்த எல்லைச்சாமி (1992) போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால் இவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் திரைப்படங்களை இயக்குவதை முழுவதுமாக விட்டுவிட்டு சில காலத்திற்கு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார்.[2]