கே. லால் | |
---|---|
பிறப்பு | காந்திலால் கிரிதாரிலால் வோரா ஏப்ரல் 10, 1924[சான்று தேவை] பாகசரா (தற்போது அம்ரேலி மாவட்டம், குசராத்து, இந்தியா) |
இறப்பு | 23 செப்டம்பர் 2012 அகமதாபாது, குசராத்து | (அகவை 88)
மற்ற பெயர்கள் | லால்சாப் |
பணி | மாய வித்தையாளர் |
வாழ்க்கைத் துணை | புஷ்பா |
பிள்ளைகள் | ஹர்ஷத் வோரா (இளைய கே. லால்) பிரீத்தி வாசா சோனால் ஷா |
வலைத்தளம் | |
www |
காந்திலால் கிரிதாரிலால் வோரா (Kantilal Girdharilal Vora; 10 ஏப்ரல் 1924 - 23 செப்டம்பர் 2012), பிரபலமாக கே. லால் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய மாய வித்தையாளர் ஆவார் .
கே.லால், பாகசராவில் (இப்போது குசராத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது) கிரிதர்லால் வோரா மற்றும் முலிபென் ஆகியோருக்கு சைனக் குடும்பத்தில் ஏப்ரல் 10, 1924 இல் பிறந்தார்.[1][2][3] இவரது மாமா லால்சந்த்பாய் கொல்கத்தாவில் ஒரு காதி துணிக்கடை வைத்திருந்தார். அவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தபோது அதை இவரது தந்தையிடம் ஒப்படைத்தார். கலவரத்தில் கடை எரிக்கப்பட்டது. அதனால் கே. லால் ஒரு வியாபாரியாக மாற வேண்டியிருந்தது. பின்னர் தங்களது துணிக்கடையை மீண்டும் கட்டினார். அதற்கு கே. சோட்டாலால் கோ எனப் பெயரிட்டார்.[1]
1950 இல் கொல்கத்தாவில் மாய வித்தையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் காட்சி கொல்கத்தாவில் உள்ள ராக்ஸி திரையரங்கில் நடைபெற்றது. தனது புதுமையான தந்திரங்களால் பிரபலமானார். தனது தந்திரங்களை தொழில்நுட்பத்துடன் உருவாக்கினார். சமூக செய்திகளையும், தார்மீகப் பாடங்களையும் தனது தந்திரங்களால் பரப்பி வந்தார். 62 ஆண்டுகால வாழ்க்கையில், இவர் உலகம் முழுவதும் 22,479 நிகழ்ச்சிகளை நடத்தினார். ஜூலை 2012 இல் அகமதாபாத்தில் உள்ள எச்.கே கல்லூரி மண்டபத்தில் தனது கடைசி நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.[3]
இவர் 1990 இல் குசராத்து திரும்பினார் [4] தனது 88வது வயதில் நீண்டகால நோயின் காரணமாக அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டில் 23 செப்டம்பர் 2012 அன்று காலமானார்..[2][4][5]
கே. லால் புஷ்பா என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு ஹர்ஷத் (இளைய கே. லால் என்றும் பெயர்) என்ற ஒரு மகனும் பிரீத்தி மற்றும் சோனால் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களும் திருமணமாகி சென்னை மற்றும் கொல்கத்தாவில் குடியேறினர்.[2][3]
ஹவாய் பல்கலைக்கழகத்தின் எழுத்தாளரும் மதப் பேராசிரியருமான லீ சீகல் எழுதிய நெட் ஆஃப் மேஜிக் என்ற புத்தகத்தில் மூத்த கே. லால் மற்றும் இளைய கே. லால் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். புனைகதை மற்றும் புனைகதை அல்லாதவற்றை ஒருங்கிணைக்கும் படைப்பில், மற்ற கூறுகளுடன், சீகலின் நீண்ட விவரங்கள் மற்றும் இரண்டு மந்திரவாதிகளுடனான சந்திப்புகள் மற்றும் விளக்கங்கள் உள்ளன.