கரிவேப்பில் இராபியா (Kariveppil Rabiya) (பிறப்பு:1966) இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் வெள்ளிலக்காடு என்ற இடத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான இவர் ஒரு சமூகச் சேவகர் ஆவார். 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேரள மாநில எழுத்தறிவு பிரச்சாரத்தில் தனது பங்கின் மூலம் முக்கியத்துவம் பெற்றார். இவரது முயற்சிகள் தேசிய அளவில் இந்திய அரசால் பல சந்தர்ப்பங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 1994ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமூகத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக தேசிய இளைஞர் விருதை வழங்கியது. சனவரி 2001இல், பெண்களின் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புக்காக 1999ஆம் ஆண்டிற்கான முதல் கண்ணகி ஸ்த்ரீ சக்தி புராஸ்கர் விருது (நாரி சக்தி விருது) இவருக்கு வழங்கப்பட்டது.[1][2]
1966 பிப்ரவரி 25ஆம் தேதி கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் வெள்ளிலக்காடு என்ற தொலைதூர கிராமத்தில் ஒரு ஏழை மாப்பிளா குடும்பத்தில் சிறிய கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்த இராபியா, பி.எஸ்.எம்.ஓ கல்லூரியில் பட்டம் பெறுவதற்கு முன்பு திரூரங்காடி உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை மேற்கொண்டார். இவரது 17 வயதில், கல்லூரியில் முதல் ஆண்டு படிப்பின்போது இவரது கால்கள் இளம்பிள்ளை வாதத்தால் முடங்கின. சக்கர நாற்காலியின் உதவியுடன் மட்டுமே இவரால் செல்ல முடியும் என்பதால் தனது படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[3][4]
சூன் 1990இல், இவர் தனது பகுதிக்கு அருகில் உள்ள படிப்பறிவற்ற மக்களுக்கு வயது வந்தோருக்கான கல்வியறிவுப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆறு மாதங்களுக்குள், திரூரங்காடியின் முழு கல்வியறிவற்ற மக்களும் இவரது வகுப்பில் இருந்தனர். இவரது உடல் நிலை மோசமடைந்திருந்தாலும், இவர் தனது முயற்சியை கைவிடாது முன்னோக்கிச் சென்றார். பொதுமக்களிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் ஆதரவைப் பெற்றார். சூன் 1992இல், மாநில அதிகாரிகளும் அதிகாரிகளும் இவரது வகுப்பறைக்குச் சென்றனர். 80 வயதான ஒரு பெண்ணுடன் 8 வயதுடைய ஒரு குழந்தை படிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இவரது கிராமத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாதது குறித்து புகார்களைப் பெற்றதும், மாவட்ட ஆட்சித் தலைவர் இவரது கிராமத்திற்கு சாலைகள், மின்சாரம், தொலைபேசி மற்றும் நீர் இணைப்பு ஆகியவற்றை அனுமதித்தார். ஒன்றரை கி.மீ. நீளமுள்ள சாலைக்கு "அட்சர சாலை என்றும் பெயரிடப்பட்டது.[3][4][5]
பின்னர் இவர் சலனம் என்ற ஒரு தன்னார்வ அமைப்பைத் தொடங்கி, அதன் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இது உடல் ஊனமுற்றோர் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்காக ஆறு பள்ளிகளை நடத்துகிறது. இந்த அமைப்பு சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. மேலும் பள்ளிகள், சுகாதாரச் சங்கங்கள், தொடர்ச்சியான கல்வித் திட்டங்கள், பெண்களுக்கான பயிற்சி மற்றும் உடல் ஊனமுற்றோரின் மறுவாழ்வு ஆகியவற்றை நடத்துகிறது. குடிப்பழக்கம், வரதட்சணை, குடும்ப சண்டைகள், மூடநம்பிக்கை மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான பொது விழிப்புணர்வை அதன் செயல்பாடுகளும் உள்ளடக்குகின்றன. கல்வியில் பின்தங்கிய கிராமமான வெள்ளிலக்காடு கிராமத்தில் பெண்களுக்கான சிறிய அளவிலான உற்பத்தி பிரிவு, பெண்கள் நூலகம் மற்றும் இளைஞர் கழகம் ஆகியவற்றை இது நிறுவியது. கேரளாவில் கல்வியறிவின்மையை ஒழிப்பதில் இவரது முயற்சிகள் முக்கிய பங்கு வகித்தன.[3][4][6]
"அட்சயா : பிரிட்ஜிங் தி டிஜிட்டல் டிவைட்" திட்டத்திலும் இவர் தன்னை மாவட்டத்தை இந்தியாவின் முதல் மின்-கல்வியறிவு மாவட்டமாக மாறியது.[7]
இளம்பிள்ளை வாதம் இவரை இடுப்புக்கு கீழே முடக்கிய சில ஆண்டுகளுக்குப் பிறகு 2000ஆம் ஆண்டில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். திருச்சூர் அமலா மருத்துவமனையில் வேதிச்சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது, இவர் மற்ற நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், அவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார்.[8]
2002 ஆம் ஆண்டில், இவர் மக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரைக்குச் சென்று, தனது நீண்டகால கனவை நிறைவேற்றினார்.[9][10]
2004 வாக்கில், குளியலறையின் கீழே விழுந்து இவரது முதுகெலும்பு பாதிக்கப்பட்டது. இது இவரை இவரது கழுத்துக்குக் கீழே முடக்கியது. வலியை மறக்க வண்ணப் பென்சிலைப் பயன்படுத்தி தனது நினைவுகளை எழுதத் தொடங்கினார். இவருக்கு பிரச்சினைகள் இருந்தபோதிலும், சலனத்தில் உள்ள 100 தன்னார்வலர்களுடன் தொடர்ந்து உறுதியுடன் தனது பணியைத் தொடர்கிறார்.[6][9]
இவரது சுயசரிதை, ஸ்வப்நங்கலுக்கு சிறகுகளுண்டு (கனவுகளுக்கு இறக்கைகள் உள்ளன) ஏப்ரல் 2009 இல் வெளியிடப்பட்டது. சுகுமார் ஆழிக்கோடு இதை வரலாற்றில் மிகப் பெரிய சுயசரிதைகளுடன் ஒப்பிடலாம் என்று பாராட்டினார்.[11] இவரது நினைவுக் குறிப்புகளின் முந்தைய தொகுப்பான "மௌன நோம்பரங்கள்" (ஊமைக் கண்ணீர்) என்பது கேரள முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தனால் 26 அக்டோபர் 2006 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 3 புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவர் தனது மருத்துவச் செலவுகளுக்காக புத்தகத்திலிருந்து வரும் தொகையைப் பயன்படுத்துகிறார்.[6][9]
உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும் இவரது சாதனைகள் 1990களில் கேரளாவில் நடந்த கல்வியறிவு பிரச்சாரத்தின் ஒரு சின்னமாக அமைந்தது.[11] "இராபியா மூவ்ஸ்" என்ற தலைப்பில் ஒரு சுயசரிதைத் திரைப்படம் இயக்குனர் அலி அக்பரால் தயாரிக்கப்பட்டது. மேலும், 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு வெளியீடுகள் இவரது படைப்புகள் குறித்து 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளன.[3][12]
இவரது முதல் தேசிய அங்கீகாரம் 1993 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய இளைஞர் விருதை வென்றதன் மூலம் வந்தது. இந்திய அரசின் குழந்தைகள் நலத் துறையால் நிறுவப்பட்ட "கண்ணகி ஸ்த்ரீசக்தி" ( நாரி சக்தி விருது ) விருதை 2000ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். 2000 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மத்திய இளைஞர் விவகார அமைச்சகமும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து நிறுவிய "வறுமைக்கு எதிரான இளைஞர் தொண்டர்" என்ற கௌரவத்தையும் பெற்றார். பன்னாட்டு ஜூனியர் சேம்பர் 1999இல் பத்து சிறந்த இளம் இந்தியர்கள் விருதுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது. நேரு யுவ கேந்திரா விருது, பஜாஜ் அறக்கட்டளை விருது, இராமாஸ்ரமம் விருது, மாநில எழுத்தறிவு சமிதி விருது,[6] சீத்தி சாஹிப் சமாரக விருது (2010), சிறந்த சமூக பணிகளுக்கான ஜோசப் முண்டச்சேரி விருது (2010), டாக்டர் மேரி வர்கீசு "ஆற்றலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குவதற்கான விருது" (2013).[13][14][15] போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
{{cite web}}
: Check date values in: |access-date=
(help); Unknown parameter |=
ignored (help)