கே. வி. தாமஸ், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1946-ஆம் ஆண்டின் மே பத்தாம் நாளில் பிறந்தார்.[1]
இவர் கீழ்க்காணும் பதவிகளை வகித்துள்ளார்.[1]
- 1984: எட்டாவது மக்களவையில் உறுப்பினர்
- 1989: ஒன்பதாவது மக்களவையில் உறுப்பினர்
- 1991: பத்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 27 மே 2009 - 18 ஜனவரி 2011: நுகர்வோர் விவகாரங்கள் துறை, உணவு, பொதுவிநியோகத்திற்கான துறை - யூனியன் மினிஸ்டர் பொறுப்பு
- 19 ஜனவரி 2011: நுகர்வோர் விவகாரங்கள் துறை, உணவு, பொதுவிநியோகத்திற்கான துறை - யூனியன் மினிஸ்டர் (தனிப் பொறுப்பு)
- அக்டோபர் 2012: நுகர்வோர் விவகாரங்கள் துறை, உணவு, பொதுவிநியோகத்திற்கான துறை - யூனியன் மினிஸ்டர் (தனிப் பொறுப்பு)
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்