கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து KLIA Ekspres | |
---|---|
கண்ணோட்டம் | |
பூர்வீக பெயர் | ' |
உரிமையாளர் | விரைவுத் தொடருந்து |
வழித்தட எண் | (ஊதா) |
வட்டாரம் | கோலாலம்பூர் கேஎல்ஐஏ T2 இஆர்எல் |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 3 |
சேவை | |
வகை | நேரடி வானூர்தி நிலைய தொடருந்து இணைப்பு (பயணிகள் தொடருந்து சேவை) |
அமைப்பு | கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து |
செய்குநர்(கள்) | விரைவுத் தொடருந்து |
சுழலிருப்பு | 8 4-பெட்டி Siemens Desiro; ET 425 M Articulated EMU 2 4-பெட்டி CRRC Changchun Equator Articulated EMU |
தினசரி பயணிப்போர் | 4,758 (Q1 2024)[1] |
பயணிப்போர் | 1.441 மில்லியன் (2023)[2] |
வரலாறு | |
திறக்கப்பட்டது | கோலாலம்பூர் சென்ட்ரல் - கேஎல்ஐஏ T1 நிலையம் 14 ஏப்ரல் 2002 |
கடைசி நீட்டிப்பு | கேஎல்ஐஏ T1 நிலையம் - கேஎல்ஐஏ T2 நிலையம் 1 மே 2014 |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 57 km (35.4 mi) |
குணம் | பெரும்பாலும் தரைவழி |
தட அளவி | 1,435 mm (4 ft 8 1⁄2 in) |
மின்மயமாக்கல் | 25 kV 50 Hz |
கடத்தல் அமைப்பு | மனித உள்ளீடு |
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத் தொடருந்து (ஆங்கிலம்; மலாய்: KLIA Ekspres; சீனம்: '吉隆坡机场快线) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குச் சேவை செய்யும் விரைவுத் தொடருந்துச் சேவை ஆகும்.[3]
இது கோலாலம்பூரின் முக்கியத் தொடருந்து நிலையமான கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கேஎல்ஐஏ T1 (KLIA T1) மற்றும் கேஎல்ஐஏ T2 (KLIA T2) நிலையங்களுக்குச் சேவை செய்கிறது.
இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை பயணம் செய்யும் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துகள் (KLIA Ekspres), மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றலைப் பெற்றுள்ளன. மேலும் கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவையின் அதே வழித்தடங்களையும் பகிர்ந்து கொள்கின்றன.
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து சேவையின் நட்புச் சேவையான கேஎல்ஐஏ போக்குவரத்து சேவை (KLIA Transit) அனைத்து தொடருந்து நிலையங்களிலும் நின்று செல்லும் சேவையை வழங்குகிறது. அதே வேளையில் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres); கோலாலம்பூர் சென்ட்ரல் மற்றும் கேஎல்ஐஏ T1 மற்றும் கேஎல்ஐஏ T2 ஆகிய நிலையங்களுக்கு மட்டும் இடைவிடாத நேரடிச் சேவையில் ஈடுபடுகிறது.
இந்த வழித்தடம், கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புக் கூறுகளில் (Klang Valley Integrated Transit System) ஒன்றாகும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் இந்த வழித்தடத்திற்கு என குறியீடும் ஊதா நிறத்தில் உள்ளது. இந்த வழித்தடம் விரைவுத் தொடருந்து இணைப்பு (Express Rail Link Sdn. Bhd) (ERL) மூலம் இயக்கப்படுகிறது.[4]
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres), கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து கேஎல்ஐஏ T1; கேஎல்ஐஏ T2 ஆகிய நிலையங்களுக்கு இடையில் எல்லா நாட்களிலும் தினசரி 05:00 முதல் நள்ளிரவு 00:00 வரை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் செல்கின்றன.[5]
24 ஆகஸ்டு 2010 அன்று, கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இரு கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துகள் மோதிக் கொண்டன. அதுவே கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துச் சேவையின் முதல் விபத்து ஆகும். அந்த விபத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர்.
கேஎல்ஐஏ (KLIA) என்பது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (Kuala Lumpur International Airport) சுருக்கமாகும். கேஎல்ஐஏ, மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். மேலும் தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. கேஎல்ஐஏ (KLIA) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.
20-ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த வானூர்தி நிலையம் அறியப் படுகின்றது. இந்த வானூர்தி நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அதிவிரைவு தொடருந்துச் சேவையின் வழி, இந்தப் பன்னாட்டு நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் வகையில் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பன்னாட்டு நிலையம் 27 சூன், 1998-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதை அமைக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; ஏறக்குறைய 12 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாயிற்று. ஒவ்வோர் ஆண்டும் 35 மில்லியன் பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளும் கொண்டு செல்லப் படுகின்றன.
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres) நிலையங்களின் விவரங்கள்:
நிலையக் குறியீடு | தோற்றம் | நிலையத்தின் பெயர் |
KE1 | கோலாலம்பூர் சென்ட்ரல் | |
KE2 | கேஎல்ஐஏ T1 நிலையம் | |
KE3 | கேஎல்ஐஏ T2 நிலையம் |
19 செப்டம்பர் 2005 அன்று, 10 மில்லியன் பயணிகள் பயணித்ததை விரைவுத் தொடருந்து இணைப்பு நிறுவனம் கொண்டாடியது. 10 மில்லியன் பயணியான எமிலியா ரோசுனைடா என்பவர் கோலாலம்பூரில் இருந்து நியூயார்க் நகரம் வரை சென்று வர வணிக வகுப்பு பயணத்திற்கான பரிசைப் பெற்றார்.[6]
12 டிசம்பர் 2007 அன்று, 20 மில்லியன் பயணியான சொக்கலிங்கம் என்பவர் கோலாலம்பூரில் இருந்து துபாய் வரை சென்று வருவற்கான பரிசைப் பெற்றார்.
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து பயணிகள் [7] | |||
---|---|---|---|
ஆண்டு | பயணிகள் | குறிப்பு | |
2023 | 1,440,773 | ||
2022 | 563,472 | ||
2021 | 53,434 | கோவிட்-19 | |
2020 | 388,949 | கோவிட்-19 | |
2019 | 2,156,302 | ||
2018 | 2,195,353 | ||
2017 | 2,275,650 | ||
2016 | 2,419,883 | ||
2015 | 3,470,710 | மிக உயர்வு | |
2014 | 2,928,302 | ||
2013 | 2,063,419 | ||
2012 | 1,649,410 | ||
2011 | 1,581,476 | ||
2010 | 1,508,734 | ||
2009 | 1,419,827 | ||
2008 | 1,578,706 | ||
2007 | 1,780,384 | ||
2006 | 1,838,723 | ||
2005 | 1,604,404 | ||
2004 | 1,912,340 | ||
2003 | 1,697,574 | ||
2002 | 1,048,201 | 14 ஏப்ரல் 2002-இல் செயல்பாடுகள் தொடங்கின |