கேஎல்ஐஏ வெளி வட்டச் சாலை

மலேசிய கூட்டரசு சாலை 27
Malaysia Federal Route 27
Laluan Persekutuan Malaysia 27

கேஎல்ஐஏ வெளி வட்ட சாலை
KLIA Outer Ring Road
Jalan Pekeliling KLIA
வழித்தடத் தகவல்கள்
நீளம்:20.0 km (12.4 mi)
பயன்பாட்டு
காலம்:
1995 –
வரலாறு:கட்டுமானம்: 1997
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கேஎல்ஐஏ விரைவுச்சாலை மாற்றுச் சாலை
 26 கேஎல்ஐஏ விரைவுச்சாலை

341 கேஎல்ஐஏ மஸ்ஜீத் சாலை
182 கேஎல்ஐஏ சாலை 1
344 கேஎல்ஐஏ கிழக்கு சாலை (பெகிலிலிங் சாலை 2)
342 பெகிலிலிங் சாலை 3
343 பெகிலிலிங் சாலை 4

E பாரோய்–செனவாங்–கேஎல்ஐஏ
முடிவு:பூங்கா ராயா வளாகம்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பந்திங்; நீலாய்; சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை; சாலாக் திங்கி; சிப்பாங்; கேஎல்ஐஏ சரக்கு முனையம்
நெடுஞ்சாலை அமைப்பு

கேஎல்ஐஏ வெளி வட்ட சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 27 (ஆங்கிலம்: Malaysia Federal Route 27; அல்லது KLIA Outer Ring Road (KLIAORR); மலாய்: Laluan Persekutuan Malaysia 27 அல்லது Jalan Pekeliling KLIA) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு விரைவுச்சாலை ஆகும்.[1]

மலேசிய கூட்டரசு சாலை 26 எனும் கேஎல்ஐஏ விரைவுச்சாலைக்குப் பிறகு கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் (Kuala Lumpur International Airport) (KLIA) இரண்டாவது பெரிய நெடுஞ்சாலை; மற்றும் வட்ட சாலையாகத் திகழ்கிறது.

பொது

[தொகு]

கேஎல்ஐஏ வெளி வட்ட சாலை, ஒவ்வோர் ஆண்டும் மலேசிய பெட்ரோனாஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் (Petronas Malaysian Grand Prix) போது சிப்பாங் பன்னாட்டு சுற்றுகைக்கு (Sepang International Circuit) முக்கியப் பாதையாகவும் மாறுகிறது. அத்துடன் 1 மார்ச் 2006 முதல் 9 மே 2014 வரை; குறைந்த கட்டணச் சேவை முனையத்திற்க்கான (Low Cost Carrier Terminal) (LCCT) முக்கியச் சாலையாகவும் சேவை செயதது.

இந்தச் சாலை கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்; மற்றும் அதன் அருகிலுள்ள சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை; மற்றும் பண்டார் என்ஸ்டெக் (Bandar Enstek) ஆகியவற்றிற்கான முக்கிய அணுகல் சாலையாகவும் செயல்படுகிறது.[2]

பொது

[தொகு]

கேஎல்ஐஏ வெளி வட்ட சாலை 20.0 கிமீ (12.4 மைல்) நீளம் கொண்டது.

கேஎல்ஐஏ வெளி வட்ட சாலையின் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (KLIA Expressway Interchange) மாற்றுச் சாலையில் தொடங்குகிறது.[3]

கேஎல்ஐஏ விரைவுச்சாலை

[தொகு]

கேஎல்ஐஏ விரைவுச்சாலையின் முதல் 5.9 கிமீ (3.7 மைல்) சாலை; வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பின் ஒரு பகுதியாக பிளஸ் விரைவுச்சாலைகள் மூலம் பராமரிக்கப்படுகிறது.

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கும் கேஎல்ஐஏ விரைவுச்சாலையின் மீதமுள்ள பகுதிகள் மலேசிய பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படுகிறது.

கேஎல்ஐஏ வெளி வட்ட சாலையின் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Public Works Department (JKR) Malaysia" (PDF). JKR Malaysia. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
  3. 3.0 3.1 "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]