கேகாலை இலங்கைத் தேர்தல் மாவட்டம் | |
மாகாணம் | சபரகமுவா |
நிருவாக மாவட்டங்கள் |
கேகாலை |
தேர்தல் தொகுதிகள் |
9 |
வாக்காளர்கள் | 613,938[1] (2010) |
மக்கள்தொகை | 807,000[2] (2008) |
பரப்பளவு | 1,693 கிமீ2[3] |
உறுப்பினர்களின் எண்ணிக்கை |
9 |
உறுப்பினர்கள் | ஜகத் பாலசூரியா, ஐமசுகூ லலித் திசாநாயக்க, ஐமசுகூ கபீர் ஹாசிம், ஐதேமு கானக்க ஹேரத், ஐமசுகூ எச். ஆர். மித்ரபால, ஐமசுகூ வை. ஜி. பத்மசிறி, ஐமசுகூ ஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ, ஐதேமு அத்தாவுட செனிவிரத்ன, ஐமசுகூ ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஐமசுகூ |
கேகாலை தேர்தல் மாவட்டம் (Kegalle electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் சபரகமுவா மாகாணத்தின் கேகாலை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 613,938 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]
கேகாலை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு: