கேக்கிரி மாவட்டம் (Kekri district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டம் மற்றும் டோங் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 7 மார்ச் 2023 அன்று நிறுவப்பட்டது.[1][2][3]இதன் நிர்வாகத் தலைமையிடம் கேக்கிரி நகரம் ஆகும். கேக்க்ரி நகரம் அஜ்மீருக்கு தென்கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கேக்கிரி மாவட்டம் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[4]அவைகள்:
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 630,832. ஆகும். .பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 967 f பெண்கள் வீதம் உள்ளனர். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 93.15, இசுலாமியர் 5.28, சமணர்கள் 1.40% மற்றும் பிறர் 0.17% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் இராசத்தானி 70.20%, தூந்தாரி மொழி15.70%, மார்வாரி மொழி 6.76% இந்தி மொழி 6.64% மற்றும் பிற மொழிகள் 0.70% பேசுகின்றனர்.