2019-இல் கேசவ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கேசவ் ஆத்மானந்த் மகராஜ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 7 பெப்ரவரி 1990 டர்பன், தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 178 செமீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 327) | 3 நவம்பர் 2016 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 8 மார்ச் 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 120) | 27 மே 2017 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 5 நவம்பர் 2023 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 16 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 94) | 10 செப்டம்பர் 2021 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 3 செப்டம்பர் 2023 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 16 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006–இன்று | குவசூலு-நட்டால் அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–இன்று | டொல்ஃபின்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | லங்காசயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–இன்று | தர்பன் கீட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | யோர்க்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | தர்பன் சூப்பர் ஜயண்ட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 1 நவம்பர் 2023 |
கேசவ் மகராச் (Keshav Maharaj, பிறப்பு: 7 பெப்ரவரி 1990) ஒரு தென்னாப்பிரிக்கத் தொழில்-முறைத் துடுப்பாட்ட வீரர். இவர் தென்னாப்பிரிக்கத் தேசிய அணியில் தேர்வு, பன்னாட்டு ஒருநாள், பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் தற்போது வரையிடப்பட்ட நிறைவுப் போட்டிகளில் துணைத்தலைவராக விளையாடுகிறார்.
இவர் ஓர் இடது-கை வழமைச் சுழல் பந்துவீச்சாளரும், கீழ்-மட்ட மட்டையாட்ட வீரரும் ஆவார். இவத் தனது முதலாவது முதல்-தரப் போட்டியை உள்ளூர் குவாசூளு-நட்டால் அணிய்க்காக 2006 இல் விளையாடினார். 2016 நவம்பரில் தென்னாப்பிரிகாவுக்காக தேர்வுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.[1][2]
2021 செப்டம்பரில், முதல் தடவையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியின் தலைவராக இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.[3] அதே காலப்பகுதியில் இலங்கைக்கு எதிரான இ20ப போட்டியிலும் தலைமைப் பொறுப்பில் விளையாடினார்.[4]
கேசவ் மகராச் டர்பன் நகரில் ஆத்மானந்த் மகராச், காஞ்சனமாலா ஆகியோருக்கு 1990 பெப்ரவரி 7 இல் பிறந்தார். கேசவின் பெற்றோரின் பெற்றோர் இந்தியாவில் உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்தில்]] பிறந்து 1874 இல் தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள்.[5] தந்தை ஆத்மானந்த் குவசூலு-நத்தால் துடுப்பாட்ட அணியில் இலக்குக் காப்பாளராக விளையாடினார்.[5] கேசவ் மகராச் ஒரு கதக் நாட்டியக் கலைஞரான லெரிசா முனுசாமி என்பவரை 2022 ஏப்ரலில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.[6][7]