கேம்ப்சு குயினோலின் தொகுப்பு | |
---|---|
பெயர் மூலம் | ருடால்ப் கேம்ப்சு |
வினையின் வகை | வளையம் உருவாகும் வினை |
இனங்காட்டிகள் | |
RSC சுட்டெண் | RXNO:0000524 |
கேம்ப்சு குயினோலின் தொகுப்பு (Camps quinoline synthesis) என்பது ஆர்த்தோ-அசைலமினோ அசிட்டோபீனோன் சேர்மத்தை ஐதராக்சைடு அயனியைப் பயன்படுத்தி A மற்றும் B என்ற இரண்டு வேறுபட்ட ஐதராக்சிகுயினோலின் விளைபொருள்களாக மாற்றுகின்ற ஒரு வகை வினையாகும் [1][2][3][4]
.
ஐதராக்சிகுயினோலின் விளைபொருட்களின் உருவாதல் விகிதம் வினை நிகழும் நிபந்தனைகளையும், தொடக்கப்பொருளின் கட்டமைப்பையும் சார்ந்தே அமைகிறது. இவ்வினையின் விளைபொருள் ஒரு ஈனால் வடிவ குயினோலின் என்று சித்தரிக்கப்பட்டாலும், திண்ம மற்றும் கரைசல் நிலைகளில் பெரும்பாலும் கீட்டோ வடிவ குயினோலின் உருவாகலாம் என்று நம்பப்படுகிறது. உருவாகும் சேர்மமும் குயினோலோன் ஆக விளைகிறது [5].
கேம்ப்சு குயினோலின் தொகுப்பு வினைக்குரிய எடுத்துக்காட்டு இங்கே தரப்படுகிறது :[5]
,