கேரள சாகச விழா

கேரள சாகச களியாட்டம் (Kerala Adventure Carnival[1]) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சாகச விழா ஆகும். கேரள சாகச களியாட்டமானது கேரள சுற்றுலா [2] மற்றும் இளைஞர் நல வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த சாகச விழாவானது கேரளத்தின் வாகமண் என்ற மலை வாழிடத்தில் நடைபெறுகிறது [3] . இந்த நிகழ்வு 10 நாட்கள் நீடிக்கும். இதில் பாராகிளைடிங், பாராமோட்டரிங், கரடுமுரடான சாலையில் ஜீப் சவாரி, மிதிவண்டி பந்தயம் ஆகியவை அடங்கும். [4] கேரள சுற்றுலா துறையிடம் இருந்து மிகவும் புதுமையான சுற்றுலா நிகழ்வுக்கான விருதை இது 2009 ஆம் ஆண்டு பெற்றது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Adventure Carnival at Vagamon Hill". The New Indian Express. 2014-02-18. Archived from the original on 2014-02-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-07.
  2. "Adventure carnival at Wagamon". The Hindu. 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-03-07.
  3. "Mesmerizing Hill Stations in Kerala". Travel News India. 2016-10-08.
  4. "Mathrubhumi: ReadMore -'Adventure carnival at Vagamon'". Mathrubhuminews.in. Archived from the original on 2014-03-08. பார்க்கப்பட்ட நாள் 2014-03-07.