கேரளப் பண்பாடு ![]() |
மொழி |
கேரள சுவர் ஓவியங்கள் (Kerala mural paintings) என்பவை கேரளத்தின் பாரம்பரிய தொன்மவியல் சார்ந்த சுதை ஓவியத்தைக் குறிப்பிடுவன ஆகும். இவை தென்னிந்தியாவின் கேரளத்தில் உள்ள பழங்காலக் கோயில்கள், தேவாலயங்கள், அரண்மனைகள் ஆகியவற்றில் வரையப்பட்டுள்ளன. இந்த பாரம்பரிய சுவரோவியங்கள் பெரும்பாலானவை கி.பி. 9 முதல் 12ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவை ஆகும்.
கேரள சுவரோவியங்களில் தலைசிறந்தவை உள்ள இடங்கள் பின்வருமாறு; ஏற்றுமானூரில் உள்ள சிவன் கோயில், மட்டஞ்சேரி அரண்மனை மற்றும் வடக்குநாதன் கோவிலில் உள்ள இராமாயண ஓவியங்கள், காயம்குளம் அருகிலுள்ள கிருஷ்ணபுரம் அரண்மனையில் உள்ள கஜேந்திர மோட்சம் ஓவியம், பாலக்காடு மாவட்டம், மன்னானார்க்காடு, பள்ளிகுருப் மகாவிஷ்ணு கோயிலில் உள்ள அனந்தசயண ஓவியம், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கருவறையில் உள்ள சுவரோவியங்கள் மிக்க புகழ்பெற்றவை. சில பழைய, பெரிய சுவரோவியங்கள் கேரளத்தில் உள்ள சேப்பாடு, ஆலப்புழா கிருத்தவ தேவாலயங்களிலும் காணக்கிடைக்கின்றன மேலும் பள்ளிக்கரா, திருவல்லா தேவாலயங்களில் ( ஒரு டசன் பழைய ஏற்பாடு ஓவியங்கள்), அங்கமாலி ( நரகம், கடைசி தீர்ப்புநாள் ஆகிய ஓவியங்கள் பெரிய அளவில் உள்ளன), அக்காப்பரம்பு தேவாலயம் ஆகிய கிருத்துவக் கோயில்களில் சிறந்த ஓவியங்களைக் காணலாம்.[1][2][3]
கேரள சுவரோவியங்களில் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகில் உள்ள திருநந்திக்கரை குகைக்கோயிலிலில் மற்றும் திருவஞ்சிக்குளம் ஆகிய இடங்களில் உள்ளவை பழமைவாய்ந்த கேரளத்தின் தனிச்சிறப்பான ஓவியங்களாக கருதப்படுகின்றன. கேரளத்தின் நுண்கலை சுவர் ஓவியங்கள் வளர்ந்த கோயில்கள் உள்ள இடங்கள் திருக்கோடித்தனம், ஏற்றுமானூர், வைக்கம், புந்தரிகம்புரம், உடையனபுரம், திருபுரங்கோடு, குருவாயூர் , குமரமநல்லூர், ஆய்மனம், திருச்சூர் வடக்குநாதன் கோயில், கண்ணூர் தொடிக்காலம் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் போன்றவை ஆகும். தேவாலயங்களில் உள்ள சுவரோவியங்கள் என்றால் ஒல்லூர், சாலக்குடி, அங்கமாலி, அக்காபரம்பு, கஞ்சூர், பள்ளிக்கரா, இடப்பள்ளி, வெச்சூர், செப்பாடு, முலந்துருத்தை ஆகியவை ஆகும்,[4] மேலும் காயம்குளம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அரண்மனை, பத்மநாப்புரம் அரண்மனை போன்ற அரண்மனைகளிலும் ஓவியங்கள் உள்ளன.
பாரம்பரிய ஓவியங்கள் வரைய வண்ணங்கள் எல்லாம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்றன பூக்களில் இருந்தும் தாவர எண்ணெயில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றன. இந்த பாரம்பரிய ஓவியங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்து அதை ஸ்ரீ சங்கரா சமஸ்கிருத கல்லூரி, போன்ற இடங்களில் கற்பிக்கப்பட்டு ஈடுபாடு மிக்க கலைஞர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கேரள சுவர் ஓவியம் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. கேரளாவின் மேலும் பல கல்லூரிகளில் கேரள சுவர் ஓவியம் பாடமாக நடத்தப்படுகிறது. அங்கு கல்வி கற்று வெளியே வரும் மாணவர்களால் இந்தக் கலை இப்போது புத்துணர்வு பெற்றுள்ளது. சுவர் ஓவியமாக மட்டுமின்றி கேன்வாசிலும் இவற்றை வரைகிறார்கள். இதனால் கோயில்களிலும் அரண்மனைகளிலும் மட்டும் அழகு சேர்ந்த இந்தச் சுவர் ஓவியங்கள் எல்லாத் தரப்பினர்களின் வீடுகளிலும் இப்போது அழகு சேர்க்கின்றன.
இந்தக் கேரள ஓவியங்கள் களமெழுத்து என்னும் சடங்கு வடிவத்திலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. களமெழுத்து என்பது தெய்வ உருவங்களைக் கோலமாக இடும் முறை ஆகும். மேலும் தமிழகத்தின் பல்லவ ஓவியக் கலை வடிவத்தையும் கேரள சுவர் ஓவியங்கள் உள்வாங்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. சோழர் காலத்து ஓவியங்களுடன் இந்த சுவர் ஓவியங்களுக்கு உறவு இருப்பதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.[5]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)