1868-லெ கேரளோல்பத்தியின் அட்டை | |
நாடு | இந்தியா |
---|---|
மொழி | மலையாளம் |
வகை | ஐதிகம், கதை, வரலாறு |
வெளியீட்டாளர் | PFLEIDERER & RIEHM |
கேரளோல்பத்தி என்னும் பழைமையான நூல் கேரளத்தின் வரலாற்றைப் பற்றிக் கூறுவதாகும். இதன் பொருள் (கேரள உள்பத்தி) கேரளத்தின் மூலம் என்பதாகும். இதை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் எழுதினார் என்று சங்குண்ணி மேனன் கூறுகிறார். கேரள மகாத்மியம் என்ற சமசுகிருத நூலின் விரிவாக்கம் போன்றது. துணை புராணங்கள் என்னும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது நம்பூதிரி சமுதாயத்தினரின் முன்னோர் பற்றிக் கூறுகிறது. ஹெர்மன் குண்டர்ட் இதை அச்சு வடிவில் கொண்டு வந்து வெளியிட்டார்.
இது மூன்று பாகங்களை கொண்டது. 1. பரசுராமனின் காலம் 2. பெருமாக்கன்மாரின் காலம் 3. தம்புராக்கன்மாரின் காலம்