கேரி சுட்டைகுமன் (Gary Steigman)( பிப்ரவரி 23,1941 - ஏப்ரல் 9,2017) ஒரு அமெரிக்க வானியற்பியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார் , அவர் பிக் பாங்கின் முதல் சில நிமிடங்களில் முதன்மை நியூக்ளியோசிந்தஸிஸ் துகள் இயற்பியல் மற்றும் நினைவுச்சின்ன துகள் மிகுதியில் தனது ஆராய்ச்சிக்காக அறியப்பட்டார்.</ref>
1961 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு , 1968 ஆம் ஆண்டில் நியுயார்க் பல்கலைக்கழகத்தின் மால்வின் உரூடர்மனின் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை அண்டவியல் பொருள் - எதிர்பொருள் சமச்சீர் பற்றிய கருதுகோள் தவறானது என்றும் , நமது அண்டத்தில் எதிர் அடர்துகளைவிட கணிசமான அளவுக்கு அடர்துகள் கூடுதலாக இருக்க வேண்டும் என்றும் காட்டியது. இந்தப் படைப்பு 1969 ஆம் ஆண்டில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டது , அதைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டில் வானியல், வானியற்பியல் ஆண்டுதோறுமான மதிப்பாய்வில் இதைப் பெரிதும் மேற்கோள் காட்டிய கட்டுரை வெளியிடப்பட்டது.[1][2] 1968 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு வானியல் நிறுவனத்தில் (இப்போது வானியல் நிறுவனம்) வருகையாளராகவும் , 1970 ஆம் ஆண்டில் கால்டெக்கில் ஆராய்ச்சியாளராகவும் ஆனார்.
இவர் 1972 முதல் 23 கோடைகள் [[ ஆசுப்பன் இயர்பியல் மையத்தில் தங்கினார்; இங்கு இவர் 1978 முதல் 83 வரை அறிக்கட்டளை உறுப்பினராகவும் 1983 முதல் 98 வரை அறிவுரைக்குழு உறுப்பினராகவும் 1983 முதல் 98 வரை நெடுங்காலம் வானியர்பியல் பணிப்பட்டறைகளை ஏற்பாடு செய்பவராகவும் இருந்துள்ளார்.[3]
இவர் 1972 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டில் ஒரு ஆசிரிய உறுப்பினரானார். தெலாவேர் பல்கலைக்கழகத்தில் பார்ட்டோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உறுப்பினராகவும் , 1986 ஆம் ஆண்டில் ஓகியோ மாநில பல்கலைக்கழகத்தில் முழு பேராசிரியராகவும் இருந்தார் , அங்கு அவர் 2012 இல் பேராசிரியராக ஓய்வு பெற்றார்.[4] 1991 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல் கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஈ. குன், டேவிட் என். சிராம்மா ஆகியோருடன் இணைந்து இவர் ஒரு கட்டுரையை வெளியிட்டார் , அதில் 4 எல்லியச்(He) செறிவுகள், முந்துபாழ் ஊடக அணுக்கருத் தொகுப்பு ஆகிய உண்மைகளைப் பயன்படுத்தி, நியூட்ரினோ இனங்களின் எண்ணிக்கையில் ஒரு புதிய வரம்பை நிறுவினார் கட்டுரை முடிவுகள் " மொத்த அடர் இலெப்டான்களின் எண்ணிக்கை 5 க்கும் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும் " என்பதைக் காட்டின.[5] அண்டவியல் பற்றிய உண்மைகள் வழி துகள் இயற்பியலை முதன்முதலில் கட்டுப்படுத்தியவற்றில் இதுவும் ஒன்றாகும்.[3]
1980 ஆம் ஆண்டு ஈர்ப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை கட்டுரைப் போட்டியிலபிவரும் சிராமும் முதல் பரிசைப் பெற்றனர் , இது மிகப்பெரிய நியூட்ரினோக்கள் ஆட்சி செலுத்தும் ஒரு கற்பனையான அண்டத்தைப் பகுப்பாய்வு செய்தது. அவர்களின் கட்டுரை பேரியோனிக் அல்லாத துகள்கள் ஆட்சி செலுத்தும் அண்டத்திற்கான தொடக்க கால முன்மொழிவுகளில் ஒன்றாகும். டேவிடு சிராம் மைக்கேல் டர்னர் கீத் ஆலிவ் மற்றும் டெரன்ஸ் பி. வாக்கர் ஆகியோருடன் இணைந்து இவர் அண்டத்தின் பேரியான் அடர்த்தி, இன்னும்பிற கட்டுப்படுத்தப்பட்ட துகள் பண்புகள் பற்றிய துல்லியமான மதிப்பீடுகளைப் பெற்றார். 1980 களிலும் மற்றும் 1990 களிலும் அண்டத்தின் பேரியான் அடர்த்திக்கான துல்லியமான மதிப்பை முன்னறிவிக்கும் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ஆவணங்களின் தொடரை அவர்கள் எழுதினர். அவர்களின் கணிப்பு சி. எம். பி அளவீடுகளால் உறுதிப்படுத்தப்பட்டது.[3]
1984 ஆம் ஆண்டில் மைக்கேல் தர்னர், இலாரன்சு கிராசு ஆகியோருடன் இணைந்து இவர் சுழியல்லாத அண்டவியல் மாறிலி என்ற கருத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி அண்டவியல் தொடர்பான பல சிக்கல்களை தீர்க்க முடியும் என்று பரிந்துரைத்தார்.[6]
இவர் 1986 இல் வானியலாளரும் இயற்பியலாளரும் ஓர் அண்டவியல் மையத்தை நிறுவ, ஓகியோ அர்சால் பணியமர்த்தப்பட்டார். இதேவேளையில், சாவோ பவுலோ பல்கலைக்கழகத்தின் வானியல், புவி இய்ற்பியல், வளிமண்டலவியல் நிறுவனத்தின் பிரேசிலிய வானியலாளரான சுவலி வைகாசை இரியோ டி ஜெனரோவில் கருத்தரங்கில் சந்தித்தபோது அவரைக் காதலிக்கத் தொடங்கினார்; சுவலி வைகாசு நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றதும், இவர்கள் இருவரும் 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் மாற்ருமகளாக சிபிலே ஆல்டிரோவந்தியும் மாற்று மகனாக சுட்டீவனும்மிலியனார்டோ ஆல்டிரோவந்தியும் மற்றுமிரு ஜில் பாயர், இராபின் கோவே எனும் மாற்று உடன்பிறப்புகளும் உண்டு. இவரது முந்தைய திருமணம் மணவிலக்கில் முடிந்தது.[6]