கேரி தீவு

கேரி தீவு
லங்காட் ஆற்றின்
வலது புறத்தில் கேரி தீவு
Map
கேரி தீவு is located in மலேசியா
கேரி தீவு
கேரி தீவு
      கேரி தீவு       மலேசியா
புவியியல்
அமைவிடம்மலாக்கா நீரிணை
ஆள்கூறுகள்2°52′N 101°22′E / 2.867°N 101.367°E / 2.867; 101.367
பரப்பளவு129 km2 (50 sq mi)
உயர்ந்த ஏற்றம்48 m (157 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை90,000

கேரி தீவு (மலாய்: Pulau Carey; ஆங்கிலம்: Carey Island) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், கோலா லங்காட் மாவட்டத்தில், மலாக்கா நீரிணை கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு.[1]

1900-களின் முற்பகுதியில், கேரி தீவு என்பது சி ஆலாங் தீவு (Pulau Si Alang) என அழைக்கப்பட்டது. மேலும் உள்ளூர் மக்களால் பங்சார் தீவு (Pulau Bangsar) என்றும் அழைக்கப்பட்டது. இது கிள்ளான் துறைமுகத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தீவில் மா மேரி (Mah Meri) எனும் பழங்குடியினர் மட்டுமே வசித்து வந்தனர்.[2]

இந்தத் தீவின் தெற்கில் கிள்ளான் துறைமுகப் பெருநகரம் (Port Klang); வடக்கில் பந்திங் நகரம் உள்ளன. மலாக்கா நீரிணை கடற்கரையில் இருந்து லங்காட் ஆற்றினால் (Langat River) பிரிக்கப்பட்ட ஒரு பெரிய தீவுதான் இந்தக் கேரி தீவு. சிங்கப்பூரின் மொத்த பரப்பளவில் ஐந்தின் ஒரு பகுதி இது எனக் கணிக்கப் படுகிறது.[3]

பொது

[தொகு]
Map
கேரி தீவு

இந்தத் தீவை இணைக்க இரு பாலங்கள் உள்ளன. முதலாவது சொடோய் - தெலுக் பாங்லிமா காராங் பாலம் (Chodoi - Teluk Panglima Garang); பந்திங் நகருக்கு அருகில் உள்ளது. இரண்டாவது புலாவ் இண்டா - கேரி தீவு பாலம் (Pulau Indah - Pulau Carey); கேரி தீவையும் தீபகற்ப மலேசியா பெருநிலத்தையும் பிரிக்கும் பாலம்.

மலேசியாவில் தற்போது மிகப் பெரிய அளவில் செம்பனை உற்பத்தி செய்யப்படும் இடங்களில் கேரி தீவும் ஒன்றாகும். அப்போது கன்னிக் காடுகளாக இருந்த கேரி தீவு, இப்போது ‘சைம் டார்பி’ நிறுவனத்தின் (Sime Darby Plantations) செம்பனை தோட்டங்களாக உருமாறி விட்டன.[4]

வரலாறு

[தொகு]

பிரித்தானிய மலாயா காலத்தில் எட்வர்ட் வாலண்டைன் ஜான் கேரி என்ற காலனிய அதிகாரி (Edward Valentine John Carey); ரப்பர் தோட்டங்களைத் தொடங்க சிலாங்கூர் சுல்தான் சர் அலாதீன் சுலைமான் சாவிடம் (Sultan Sir Alaeddin Sulaiman Shah of Selangor) இருந்து கேரி தீவைப் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் ஜான் கேரியின் பெயரால் இந்தத் தீவிற்கு கேரி தீவு (Carey Island) என பெயரிடப்பட்டது. அப்போது இருந்து இப்போது வரை இந்தத் தீவு புலாவ் கேரி (Pulau Carey) அல்லது கேரி தீவு என்று அழைக்கப் படுகிறது. ரப்பர் மற்றும் காப்பி உற்பத்தியை வளர்ச்சி பெறச் செய்து, மலேசிய நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்த ஜான் கேரியின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.[2]

கேரி தீவு எனும் பெயர் இருந்தபோதிலும், உள்ளூர்வாசிகள் பலர் அதை ஓர் உண்மையான தீவாகக் கருதவில்லை. அந்தத் தீவு பெருநிலப்பகுதிக்கு மிக அருகாமையில் இருப்பதாலும்; பிரதான நிலப் பகுதியில் இருந்து அந்தத் தீவைச் சின்ன ஓர் ஆறு பிரிப்பதாலும்; தீபகற்ப மலேசியாவின் பெருநிலப்பகுதியாகவே கருதுகிறார்கள்.[2][4]

1905-இல் ரப்பர் அறிமுகம்

[தொகு]
ஜுக்ரா மலையில் உள்ள பெர்மாத்தாங் பாசிர் சீனக் கல்லறையின் உச்சியில் இருந்து, கேரி தீவு மற்றும் லங்காட் ஆறு

ஜுக்ரா லேண்ட் அண்ட் கேரி (Jugra Land and Carey Ltd) எனும் நிறுவனத்தின் கீழ், கேரி தீவில் ஒரு தோட்டத் தொழிலை ஜான் கேரி தொடங்கினார். 1905-இல் கேரி தீவில் ரப்பர் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 1907-இல் கேரி தீவை நிர்வாகம் செய்ய ஒரு நிரந்தர பணிக் குழுவும் உருவாக்கப்பட்டது.[2]

தீவின் வளர்ச்சியின் முதல் 40 ஆண்டுகளில், தென்னிந்தியர்கள், மா மேரி (Mah Meri) பழங்குடியினர் மற்றும் மலாய்க்காரர்கள் தொழிலாளர்களாக இருந்தனர்.

புலிகள் பிரச்சினை

[தொகு]

தொடக்க நாட்களில் தொழிலாளர்கள் பிரச்சினை; புலிகள் பிரச்சினை; மற்றும் மலேரியா நோய் பிரச்சினை; போன்றவற்றின் காரணமாக தீவின் வளர்ச்சியில் பெரும்பாலான பணிகள் தாமதமாகின.

தென்னிந்தியத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு நிலத்தைச் சுத்தப் படுத்தவும்; வளமனைகள் (Bunglows), சாலைகள், அகழிகள், அணைகள், பிறகுடியிருப்புகள் கட்ட உதவுவதற்காகவும்; மா மேரி பழங்குடியினர் உதவிகளை வழங்கினர். மலேசியாவில் மூன்று பிரிவுகளில் வாழும் 18 இனப் பூர்வக்குடிகளில் செனோய் பிரிவைச் சேர்ந்த இந்த இனத்தவர்கள் கடற்சார்ந்த வாழ்க்கை வாழும் பூர்வக் குடிகளாவர்.[2]

கேரி தீவு தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

கேரி தீவில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அப்பள்ளிகளில் 153 மாணவர்கள் பயில்கிறார்கள்; 30 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD1066 தெற்கு கேரி தீவு
Pulau Carey Selatan
SJK(T) Pulau Carey Selatan தெற்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி 42960 கேரி தீவு 38 10
BBD1067 மேற்கு கேரி தீவு
Pulau Carey Barat
SJK(T) Pulau Carey Barat மேற்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி 42960 கேரி தீவு 84 10
BBD1068 கிழக்கு கேரி தீவு
Pulau Carey Timur
SJK(T) Pulau Carey Timur கிழக்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி 42960 கேரி தீவு 31 10

இன்றைய நிலை

[தொகு]

தற்போது, கேரித் தீவில் 12,000 எக்டர் பரப்பளவு செம்பனைத் தோட்டங்களாக உள்ளன. அவை சைம் டார்பி தோட்டங்கள் (Sime Darby Plantations); கோல்டன் ஓப் தோட்டங்கள் (Golden Hope Plantations); ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமானவை.

எஞ்சிய 5,000 எக்டர் பரப்பளவு நிலம், சிலாங்கூர் மாநில அரசிற்குச் சொந்தமானது. அந்த நிலத்தில் ஐந்து மா மேரி பழங்குடியினர் குடியிருப்புகளும்; மலாய்க்காரர்களின் குடியிருப்புகளும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pulau Carey". VisitSelangor.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "In the early 1900s, Carey Island was known as Pulau Si Alang (Pulau Bangsar), located approximatley 14km off Port Klang, the island was only inhabited by the Mah Meri tribe. It became Carey Island after planter, an Englishman in the name of Edward Valentine John Carey has acquired an island from His Highness Sultan Sulaiman of Selangor to start rubber plantations and since then until now the island is known as Carey Island or Pulau Carey". careyisland.info. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
  3. "Carey Island is a small island in Kuala Langat. It is located south of the port of Klang. Carey Island's tourist attractions are mostly famous for their indigenous people of Selangor or indigenous settlements". 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
  4. 4.0 4.1 தேடல்கள், யோகியின். "மிகப் பெரிய அளவில் செம்பனை உற்பதி செய்யப்படும் இடங்களில் அந்தத் தீவும் ஒன்று என்பதை நாம் பயணத்தின் போதே அனுமானிக்க முடியும். அழிக்கப்பட்ட கன்னிக்காடுகள் 'சைம் டர்பி' நிருவனத்தின் செம்பனை தோட்டங்களாக உருமாறி, நீர் நிலைகளுக்குப் பஞ்சமில்லாத அங்குச் செழித்து வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம்". யோகியின் தேடல்கள்.... பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
  5. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.

வெளி இணைப்புகள்

[தொகு]