கைகாட்டி புதர்த் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | 'ரார்செசுடெசு
|
இனம்: | ரா. கைகாட்டி
|
இருசொற் பெயரீடு | |
ரா. கைகாட்டி பிஜூ & போசுயுத், 2009 | |
வேறு பெயர்கள் | |
|
ரார்செசுடெசு கைகாட்டி (Raorchestes kaikatti), என்பது சில சமயங்களில் கைகாட்டி புதர்த் தவளை அல்லது கைகாட்டின் புதர் தவளை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளுள் உள்ள நெல்லியம்பதி மலைகளில் மட்டுமே காணப்படும் மிக அருகிய தவளை சிற்றினம் ஆகும்.[2]
ரார்செசுடெசு கைகாட்டி சிறிய வகைத் தவளையாகும். (ஆனால் ரார்செசுடெசு பேரினத் தவளைகளில் நடுத்தர அளவு), ஒப்பீட்டளவில் வலுவான-உடல்கொண்ட தவளைகள். ஆண் தவளையின் நீளம் 23–26 mm (0.91–1.02 அங்).முதுகுபுறம் அடர் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் ஒழுங்கற்ற வெளிர் சாம்பல் மற்றும் அடர் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். கண்களுக்கு இடையில் ஒரு அடர் கிடைமட்ட சாம்பல் பட்டை உள்ளது.[2]