கைரதாபாத் | |
---|---|
நகர மையம் | |
ஆள்கூறுகள்: 17°26′12″N 78°26′38″E / 17.436793°N 78.443906°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத்து மாவட்டம் |
மெற்றோ | ஐதராபாத்து |
நிறுவப்பட்டது | 1626 |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
• சட்ட மன்ற உறுப்பினர் | தனம் நாகேந்தர் |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500004 |
வாகனப் பதிவு | டிஎஸ்-09 |
மக்களவைத் தொகுதி | சிக்கந்தராபாத் |
சட்டப் பேரவைத் தொகுதி | கைரதாபாத் |
திட்டமிடல் நிறுவனம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
இணையதளம் | telangana |
கைரதாபாத் (Khairatabad) என்பது ஐதராபாத்து மாவட்டத்திலுள்ள சிக்கந்தராபாத் வருவாய் பிரிவிலுள்ள ஒரு மண்டலம் ஆகும்.
ஐந்து சாலைகள் சந்திக்கும் இடம் கைரதாபாத் வட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது நகரத்தின் பரபரப்பான இடங்களில் ஒன்றாகும். இந்த சாலைகள் சோமாஜிகுடா, அமீர்பேட்டை, உசேன் சாகர், இலக்டி-கா-புல், ஆனந்தநகர் நோக்கி செல்கின்றன . அத்தகைய ஒரு சாலை தெலங்காணா ஆளுநரின் குடியிருப்பான இராஜ் பவன் சாலை என அழைக்கப்படுகிறது. [1]
குறிப்பிடத்தக்க நிறுவனங்களும், அமைப்புகளும், பொறியியல் கல்விநிறுவனங்களும், இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரி, சாலை போக்குவரத்து ஆணையம், தெலங்காணா மாநில மின் உற்பத்தி நிறுவனம் & தெலங்காணா மாநில அரசின் மின்சார பரிமாற்ற நிறுவனம், படேல் கட்டிடம், நாசிர் பள்ளி, மாவட்ட வாரியம், ஜீ தெலுங்கு அலுவலகம், பத்திரிக்கைச் சங்கம், கிறித்தவ சுவிசேச தேவாலயம் குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் போன்றவை இங்கு அமைந்துள்ளன. [2]
ஒரு பாதை, விசுவேசுவரையா மேம்பால வட்டத்தில் தொடங்கி உசேன் சாகர் ஏரிக்கு செல்கிறது.
இந்த பகுதிக்கு கைர்-உன்-நிசாவின் பெயரிடப்பட்டது. அவரது கல்லறை கைரதாபாத் பள்ளிவாசலுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த கல்லறை 2002ஆம் ஆண்டு வில்லியம் தால்ரிம்பில் எழுதிய வொயிட் முகல்ஸ் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கேப்டன் ஜேம்ஸ் அகிலெஸ் கிர்க்பாட்ரிக்கின் மனைவி கைர்-உன்-நிசாவின் கல்லறையாக இருக்கலாம். 300 ஆண்டுகள் பழமையான ரெட்டி வீடு ஒன்றும் (குடும்பப்பெயர்: மரமகந்தி) உள்ளது.
ஐதராபாத்தின் மிகப்பெரிய பிள்ளையார் சிலை ஒன்று விநாயக சதுர்த்தி விழாவின் போது கைரதாபாத் மாநில நூலகத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.
11 நாள் திருவிழாவில் உள்ளூர் மக்கள் பங்கேற்கிறார்கள். பிள்ளையாரின் ஆசீர்வாதம் பெற இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுகிறார்கள். 11 வது நாளில், ஊர்வலம் விக்கிரகத்தை உசேன் சாகர் ஏரிக்கு கொண்டு செல்கிறது. சிலையை மூழ்கடித்த பிறகு, திருவிழா முடிகிறது.
திருவிழாவை ஆதரிப்பதற்காக உள்ளூர் மக்கள் கைரதாபாத்தின் கணேசு உற்சவ குழுவை [3] அமைத்தனர். சிங்காரி குடும்பத்தினர் இந்த விழாவை 1954 முதல் நடத்தி வருகின்றனர். பல ஏழைக் குடும்பங்கள் இங்கு வரும் பார்வையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் உயிர்வாழ்கின்றன.
திருவிழாவிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சிலையின் கட்டுமானம் தொடங்குகிறது. கிட்டத்தட்ட 58 அடி உயரமுள்ள இந்த பெரிய சிலையை நிர்மாணிப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு சிற்ப கலைஞரின் தலைமையில் கிட்டத்தட்ட 200 தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்கிறார்கள்.
2018இல் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸிலிருந்து களிமண் சிலைக்கு மாற உற்சவக் குழு ஒப்புக்கொண்டது. [4]