கைரேகை அங்கீகாரம் (fingerprint recognition அல்லது fingerprint authentication) என்பது இரண்டு மனித கைரேகைகளுக்கு இடையான தானியங்கி ஒப்பிடும் முறைமையாகும். கைரேகை அங்கீகாரம் என்னும் முறை, தனி நபர்களை அடையாளப்படுத்தவும் மற்றும் கண்டுபிடிக்கவும் பயன்படும் உயிரியல் சார்ந்த தொழில்நுட்ப முறைகளில் ஒன்றாகும். இதற்கான அடிப்படைக் காரணம் யாதெனில் கைரேகை என்பது ஒவ்வொரு மனிதனிற்கும் வெவ்வேறாக அமைந்திருப்பதே.
இரு கைரேகைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பலவிதமான உத்திகளை பயன்படுத்துகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் கைரேகையில் உள்ள ரேகைகளின் அமைவிடம் மாற்றும் அதன் வடிவங்களே ஆகும்.[1] அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் மனித தோலின் அமைப்பு மற்றும் இயல்பும் என்பின்பவியல் மூலம் இஸ்கானிங் செய்யப்பட்டு ஒப்பிடப்படுகின்றது.
ரேகைகளின் முகட்டு வடிவமைப்பு முறை பிரதானமாக மூன்று வகைப்படும்
பொதுவாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரேவிதமான கைரேகை அமைப்புடையவர்களாக இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஒரு மனிதன் பிறக்கும் போது அவனது ரேகை அமைப்பைத் தீர்மானிப்பது பரம்பரை அலகுகள் என்று ஒரு நம்பிக்கைக்கு வந்துள்ளனர்.[2]
கைரேகைகளின் அமைப்புகளில் மிக முக்கியமான தத்துரூப அம்சம் யாதெனில் ஒவ்வொரு ரேகையின் முடிவு வடிவம் ஆகும். இவ் வடிவங்கள் மூன்று வகைப்படும்.[3]
![]() |
![]() |
![]() |
மின்னணு வகை உணரிகள் மூலம் கைரேகையின் வடிவங்கள் எண்ணுமப் படிமங்களாக ஆக்கப்படுகின்றன. இப்படிமங்கள் எண்ணும செயற்படுத்தல் முறை மூலம் உயிரியளவு வார்ப்புருக்களாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகின்றன. பின்னர் இவ்வார்ப்புருக்கள் தேவையானபோது ஒப்பிடுதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[1] ஒளியியல். ஒலியியல், வெப்ப, மீயொலி மற்றும் வேறு பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒளியியல் முறையில் கைரேகைகள் ஒரு எண்ணியல் படக்கருவி ( digital camera ) மூலம் படிமமாக்கப்படுகின்றன. இவை அலைகற்றைகளில் கண்ணிற்கு புலப்படும் ஒளிவீச்சத்திற்குள் உள்ள மீடிறன் மூலம் செயல்படுகின்றது. இவ்வகை உணரியின் மேல் கை விரலை வைக்கும் அடுக்கானது தொடுகை மேற்பரப்பு எனப்படும். இந்த மேற்பரப்பின் கீழே ஒரு ஒளிர் கதிர்வீசும் அடுக்கு காணப்படும். இதுவே கைவிரல்களை சென்சரின் மேல் வைக்கும் போது அதை ஒளிர்விக்க செய்கிறது. கைரேகைகளில் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிர்கள் இந்த இரண்டாவது அடுக்கை கடந்து சென்று வரிசைப்படுத்தப்பட்ட ஒரு திண்ம நிலை படப்புள்ளி அடுக்கில் விழும்போது அதை ஒரு காட்சி படவடிவில் சேமிப்பு செய்து அதை முன்பு சேமித்து வைக்கபட்ட கைரேகைகளுடன் ஒப்பிடு பார்த்து முடிவுகளை திரையில் வெளிகாட்டுகின்றது. தூசி மற்றும் அழுக்கு படிந்த கைகளும், காயம் பட்ட கைகளையும் ஸ்கேன் செய்வது இந்த முறையில் ஒரு பின்னடைவாகும். அதுமட்டுமல்லாமல் கைரேகைகளின் ஒளிப்படங்களை வைத்து இவ்வுணரிளை ஏமாற்ற முடியும் என்பதனால் இவ்வகை உணரிகள் நம்பகத்தன்மை குறைந்ததாகவே கருதப்படுகின்றன.[4][2]
இவ்வகை உணரிகள் மருத்துவ மீயொலி வரைவு முறையையே கைரேகைகளை ஸ்கேன் செய்ய பயன்படுத்துகின்றன. அதிக மீடிறன் கொண்ட ஒலியலைகளைப் பயன்படுத்தி கைவிரல்களின் மேற்பரப்பை ஊடுருவி கைரேகைகளை ஸ்கேன் செய்கின்றன. இவ்வகை அதிமீடிறன் கொண்ட ஒலியலைகளை எழுப்பவும் அந்த ஒலியலைகளின் பிரதிபலிக்கும் ஆற்றலின் அளவை அளக்கவும் தகைவுமின் ஆற்றல்மாற்றி என்னும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது. கைவிரலின் மேல் தோல்கள் மட்டுமல்லாமல் உட்தோல்களும் ஒரே அமைப்பை பெற்றிருப்பதினால் இவ்வகை சென்சார்கள் உள்தோல் அமைப்பை ஸ்கேன் செய்கின்றன. இதனால் விரலின் வெளித்தோல் அழுக்காக இருந்தாலும் சரி இல்லை காயம் பட்டிருந்தாலும் இலகுவாக இவைகளால் ஸ்கேன் செய்து கொள்ள முடியும், அதுமட்டுமல்லாமல் இவைகள் உட்தோலிலுள்ள ரேகைகள ஸ்கேன் செய்வதனால், ரேகைகள் உள்ள ஒளிப்படங்களை வைத்து இவைகளை ஏமாற்ற முடியாது.[5]
இவ்வகை உணரிகள் மின்தேக்க முறையைக் கைரேகைகளைப் பிரதியெடுத்து உள்வாங்க பயன்படுத்துகின்றன. இவை இரண்டு வகைப்படும்.[6]
முதன்முதலில் Motorola Mobility Atrix 4G ஏ கையடக்க தொலைபேசிகளில் கைரேகை அங்கீகாரத்தொழில்நுட்பத்தினை 2011 ஆம் ஆண்டு அறிமுகபடுத்தியது அதன் பின்பு இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஜாம்பவான் ஆனா ஆப்பிள் நிறுவனம் தனது கையடக்க தொலைபேசியான IPHONE 5S இல் இத்தொழில் நுட்பத்தினை பெரிய அளவில் அறிமுகம் செய்தது. இதன் பின்பு ஒருமாத காலத்தில் HTC நிறுவனமும் அதன் பின் 2014 இல் சாம்சுங் ( samsung ) நிறுவனமும் அறிமுகபடுத்தியது. இன்றைய தினத்தில் நூறு டோலர்களிற்கு மதிக்கத்தக்க கையடக்க தொலைபேசிகளில் கூட இந்த தொழில்நுட்பத்தை காண கூடியதாக உள்ளது.[3]
இணைத்துப் பார்த்து சரிபார்க்கும் நெறிமுறைகளே இங்கே பயன்படுத்தபடுகின்றன. இவை முதலில் உட்செலுத்தபட்டிருக்கும் கைரேகையினையும் பின்பு உள்வாங்கும் கைரேகையினையும் முழுவதுமாக அல்லது கைரேகையின் சில நுண்ணிய அம்சங்களை மட்டும் முன் உட்செலுத்தபட்டதுடன் சரியாகப் பொருந்துகிறதா எனச் சரிபார்த்து முடிவுகளைத் திரையில் வெளிக்காட்டும்.[7]
2002 இல், ஜப்பானை சேர்ந்த ஒரு ரகசியக்குறியீட்டாளர் இத் தொழில்நுட்பத்தை எப்படி செயலிழக்க செய்ய முடியும் என்று விளக்கம் காட்டினர். இவர் செய்த ஐந்து சோதனைகளுள் நான்கு சோதனைகளில் இந்தத் தொழில்நுட்பத்தை இவர் செயலிழக்கச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரமிக்க தக்க விஷயம் என்னவென்றால் இவர் இந்தச் செயலைத் தனது வீட்டில் கிடைக்கும் சிறுசிறு பொருட்களைக் கொண்டே இதைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[4]
{{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help){{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help)