கைலாசகிரி | |
---|---|
கைலாசகிரியில் அமைந்துள்ள சிவ-பார்வதி சிலை | |
அமைவிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 17°44′56″N 83°20′32″E / 17.748992°N 83.342236°E |
பரப்பளவு | 380 ஏக்கர்கள் |
வருகையாளர்கள் | தினமும் 3500-3600 பேர் [2] |
இணையதளம் | vmrda |
கைலாசகிரி என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரில் மலைமீது அமைந்த பூங்காவாகும்.[3] இந்தப் பூங்காவை விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (வி.எம்.ஆர்.டி.ஏ) உருவாக்கியது. இப்பூங்காவானது 380 ஏக்கர் பரப்பில் தாவரங்கள் மற்றும் வெப்பமண்டல மரங்களால் நிறைந்து காணப்படுகிறது. இந்த மலையானது 173 மீட்டர் (568 அடி) உயரம் கொண்டதாகவும், விசாகப்பட்டினம் நகரத்தைக் கவனிக்கச் சிறந்த இடமாகவும் உள்ளது.
ஆந்திர அரசு 2003 ஆம் ஆண்டில் கைலாசகிரியை "சிறந்த சுற்றுலா இடமாக" அறிவித்து பரிசு வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக முப்பதாயிரம் இந்திய மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூங்காவிற்கு வருகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, வி.எம்.ஆர்.டி.ஏ நிறுவனம் இந்த மலையை நெகிழி இல்லாத மண்டலமாக அறிவித்துள்ளது.[3] ஆந்திராவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட கம்பிவட கார் மலையின் உச்சியினை இணைகிறது.[4] விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து கைலாசகிரி 10 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினம் துவாரகா பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.