கைவாரா (Kaiwara) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூருக்கு சுமார் 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் சிந்தாமணி என்ற ஊர் பகுதியின் அருகிலுள்ள வட்டத் தலைநகரமாகவும், ஒரு வணிக மையமாகவும் இருக்கிறது.
2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊரின் மக்கள் தொகை 5,488 ஆகும். இதில் 2,792 ஆண்களும் மற்றும் 2,696 பெண்களும் அடங்குவர்.[1]
இந்த ஊரில் பிரபலமான கைவாரா நாராயண தாத்தா என அழைக்கப்படும் யோகி நாராயணப்பா (கி.பி 1730-1840) என்னும் துறவி இங்குள்ள ஒரு குகையில் தியானம் செய்தவர் இவரது மடத்திற்காக இந்த ஊர் பெயர் பெற்றது. மடாலயத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட இலவசமாக தங்குமிடமும், உணவும் கிடைக்கிறது. விஷ்ணுவின் அவதாரமான அமரா நாராயணசுவாமியைப் புகழ்ந்து நாராயணப்பா கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் கவிதைகளை இயற்றினார். இவரது படைப்புகளில் "அமரநாராயண சதகம்", "காலாக்னனா",[2] "பிரமானந்த்புரி சதகம்" ஆகியவை அடங்கும். இதில் இவர் யோகக் கலையின் அனைத்து நுணுக்கங்களையும் விளக்குகிறார். இவரது கீர்த்தனைகள் கர்நாடகவின் புகழ்பெற்ற புரந்தரதாசர், கனகதாசர் போன்றோரின் கீர்த்தனைகளுடன் ஒப்பிடத்தக்கவை . இன்றைய ஆந்திராவின் வேமனா கவி, வீர பிரம்மேந்திர சுவாமி, இன்றைய கர்நாடகாவின் சர்வக்ஞர் போன்றாரால் தாத்தையா செல்வாக்குப் பெற்றதாகத் தெரிகிறது.
கைவராவில் உள்ள சுவாமி நாராயண ஆசிரமம் ஒன்று இங்குள்ளது. மேலும் இது ஒரு யாத்திரை மற்றும் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.[2] இங்குள்ள ஒரு குகையின் பக்கத்திலுள்ள வைகுந்தம் (கோயில்), அமரநாராயணசுவாமி கோயிலும், வீமன் பகாசூரனைக்ன் கொன்றதாகக் கருதப்படும் மலையடிவாரமும் இங்குள்ள குறிப்பிடத்தக்க இடங்களாகும்.
இந்த நகரம் துவபார யுகத்தில் ஏகச்சக்ரபுரம் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய காவியமான மகாபாரதத்தின் பாண்டவர்கள் தங்கள் வனவாச காலத்தில் (காட்டில் கழித்த காலம்) இங்கு வாழ்ந்தனர். தருமனின் சகோதரரான வீமனால், சிவனுக்கு (பீமலிங்கேசுவரர் கோயில்) அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஒன்று இருக்கிறது. கர்நாடக வனத்துறையால் பராமரிக்கப்படும் பூங்கா ஒன்று அருகிலேயே அமைந்துள்ளது.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)