கொடும்பாவி கொளுத்துதல் (Effigy) என்பது ஒரு குறிப்பிட்ட மனிதரை உருவகப்படுத்தும் விதமாக முழு உருவ பொம்மையை எரித்தல் ஆகும்.[1] அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களில் தாங்கள் எதிர்க்கும் மனிதருக்கு குறியீட்டுத் தண்டனைக் கொடுக்க பயன்படுத்தப்படும் தற்காலிக பொம்மைகளும், சமய விழாக்களை ஒட்டி மரபாக எரிக்கப்படும் உருவங்களும் கொடும்பாவி என்று பொதுவாக அழைக்கபடுகிறன்றன. ஐரோப்பிய பண்பாட்டில், கடந்த காலங்களில், நீதித் துறையால், குற்றவாளியைக் முறையாக கைது செய்ய முடியாதபோதும், சமூக அவமானம் மற்றும் ஒதுக்கிவைக்கும் பரவலான நீதி நடைமுறைகளிலும் கொடும்பாவிகள் பயன்படுத்தப்பட்டன.
வட இந்தியாவில், பாரம்பரியமான இராமலீலை விழாவின் ஒரு பகுதியாக பத்து தலை இராவணனின் மிகப் பெரிய உருவத்தை வட இந்தியாவில் எரிக்கின்றனர். மெக்சிகோவிலும். அமெரிக்காவிலும் அரசியல்வாதிகளை சித்தரிக்கும் விதமாக கொடும்பாவி மொம்மைகளை போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அடிக்கின்றனர்.[2]
நாட்டில் பாவச் செயல்கள் பெருகிவிட்டால் மழை பெய்யாது என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடம் இருந்தது. இதனால் மழை பெய்யாத காலங்களில் அதற்கு பரிகாரமாக பாவத்தின் உருவமாக ஒரு கொடும்பாவி உருவத்தை செய்து, அதை ஊர் ஊராக இழுத்துச் சென்று இறப்புச் சடங்குகளுடன் தீவைத்து எரிக்கும் சடங்குகள் ஒரு காலத்தில் செய்யப்பட்டன. இது இருபதாம் நூற்றாண்டில் போராட்ட வடிவங்களில் இடம்பெற்றது. 1980களில் இலங்கை இனப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த மாணவர் போராட்டங்களில் சிங்கள ஆட்சியாளர்களின் கொடும்பாவியை எரித்தல் என்பது தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் நடந்தது.[3]
{{cite web}}
: Missing or empty |url=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help); URL–wikilink conflict (help)