கொண்டகாமேரு வனவிலங்கு சரணாலயம் (Kondakameru Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மால்கான்கிரி மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
இச்சரணாலயம் 430 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது. இச்சரணாலயப் பகுதியில் பெரும்பாலும் சிறிய மலைகளும் பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. இது கிழக்கு மேட்டுநில ஈரமான இலையுதிர் காடுகளின் சுற்றுச்சூழல் பகுதியில் உள்ளது. இங்குக் காணப்படும் முக்கிய தாவரங்கள் கலப்பு இலையுதிர் காடுகள் மற்றும் புதர் காடுகளாகும்.[1]