கொதி குழாய்

கொதிகுழாய்

கொதி குழாய் என்பது, ஆய்வுகூடங்களில் பயன்படும் சோதனைக் குழாய்கள் போன்ற குழாய் வடிவக் கொள்கலம் ஆகும். இது சோதனைக் குழாயைவிட அளாவில் பெரியது. இதன் மேற்பகுதி திறந்தும், அடிப்பகுதி பெரும்பாலும் வளைவானதாகவும் இருக்கும். திறந்த மேற்பகுதி பொதுவாக வெளிப்புறம் வளைந்த விளிம்பு கொண்டதாக இருக்கும். இவ்வமைப்பு உள்ளேயிருக்கும் நீர்மங்களைப் பாதுகாப்பாக வேறு கலங்களில் ஊற்றுவதற்கு வசதியானது.

பல விதமான தேவைகளை நிறைவேற்றுவதற்காக, கொதிகுழாய்கள், பல்வேறு நீள, அகலங்களில் உருவாக்கப்படுகின்றன. கொள்ளக்கூடிய உச்சக்கொள்ளளவு 20 ml ஆக இருக்கும். நீண்ட நேரம் மாதிரிகளைச் சூடாக்க வேண்டிய தேவைகளுக்கு பயன்படும். இது வெப்பத்தைத் தங்கக் கூடியதாக பைரெக்சுக் கண்ணாடியினால் செய்யப்படும்.