கொயேனா ஆறு | |
---|---|
அமைவு | |
Country | இந்தியா |
State | ஒடிசா, ஜார்கண்ட் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | பங்கொன், ஒடிசா |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | தென் கோயல் |
நீளம் | 83 km (52 mi) |
கொயேனா ஆறானது (Koina River) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்க்பும் மாவட்டத்தில் ஓடுகிறது.[1]
கொயேனா ஆறு ஒடிசாவில் உள்ள பங்கொன் என்ற இடத்தில் தோன்றி 83 கிலோ மீட்டர் ஓடி தென் கோயல் ஆற்றில் கலக்கிறது.[2] இது சராந்த காட்டின் வழியாக ஓடுகிறது.[3]
இந்த பகுதியில் உள்ள பல ஆறுகள் கோடை காலத்தில் வறண்டு விடுகின்றன. ஆனால் கொயேனா ஆற்றில் கோடைக் காலத்திலும் கூட பல மாதங்களாக மழை பொய்த்தாலும் அபரிமிதமான தண்ணீர் ஓடுகிறது. பல ஓடைகள் இவ்வாற்றில் வந்து கலப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.[4]