கொய்னா காட்டுயிர் உய்விடம் | |
---|---|
சகாயத்ரி புலிகள் காப்பகம் | |
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
![]() சிவசாகர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதி | |
அமைவிடம் | சத்ரா மாவட்டம், மகாராட்டிரம் இந்தியா |
அருகாமை நகரம் | கோலாப்பூர் & புனே |
ஆள்கூறுகள் | 17°32′56″N 73°45′11″E / 17.54889°N 73.75306°E |
பரப்பளவு | 423.55 சதுர கிலோமீட்டர்கள் (163.53 sq mi) |
நிறுவப்பட்டது | 1985 |
நிருவாக அமைப்பு | Maharashtra State Forest Department |
அலுவல் பெயர் | இயற்கை வளங்கள் - மேற்குத் தொடர்ச்சி மலை (இந்தியா) |
வகை | இயற்கைவளம் |
வரன்முறை | ix, x |
தெரியப்பட்டது | 2012 (36வது கூட்டம்) |
உசாவு எண் | 1342 |
மாநில | இந்தியா |
பகுதி | இந்திய துணைக்கண்டம் |
கொய்னா வனவிலங்கு சரணாலயம் (Koyna Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் இயற்கையாக அமைந்துள்ள உலக பாரம்பரிய தளமாகும். இந்த வனவிலங்கு சரணாலயம் முக்கியமான பறவைகள் வாழும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 423.55 km2 (163.53 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 1,100 m (2,000 முதல் 3,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது மகாராட்டிரவில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயமாக 1985-ல் அறிவிக்கப்பட்டது. இது சகாயத்ரி புலிகள் காப்பகத்தின் வடக்குப் பகுதியை உள்ளடக்கிய, சண்டோலி தேசியப் பூங்காவின் தெற்குப் பகுதியை உருவாக்குகிறது.
வசோட்டா கோட்டை காட்டின் மையத்தில் கடல் மட்டத்திற்கு 1,120 m (3,670 அடி) மேல் அமைந்துள்ளது. 1170-ல் மால்வா அரசர் போஜானால் இந்தக் கோட்டை கட்டப்பட்டதாகப் புராணக் கதை கூறுகிறது.
கொய்னா, கண்டதி மற்றும் சோலாசி ஆகிய ஆறுகள் சரணாலயத்தின் வழியாகச் செல்கின்றன. இது கொய்னா ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் சிவசாகர் நீர்த்தேக்கப் பகுதி கோய்னா அணையினால் உருவானது. பூங்காவின் தெற்கே சண்டோலி தேசிய பூங்கா உள்ளது.[1] இந்த சரணாலயத்தில் கொய்னா அணையின் கிழக்கு மற்றும் மேற்கு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளன. சிவசாகர் நீர்த்தேக்கம் மற்றும் இருபுறமும் மேற்குத் தொடர்ச்சி மலையின் செங்குத்தான சரிவுகள் ஆகியவற்றால் இந்த சரணாலயம் நன்கு பாதுகாக்கப்படுகிறது. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதி சந்தோலி தேசிய பூங்கா மற்றும் தெற்கில் உள்ள ராதாநகரி வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றுடன் காடுகள் நிறைந்த வனவிலங்கு வழித்தடத்தால் இணைக்கப்பட்டுள்ளது. சந்தோலியைப் போலவே, கொய்னாவும் சகாயத்ரி புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.[2]
இதன் சராசரி உயரம் 897 m (2,943 அடி) மீட்டர். சராசரி ஆண்டு மழை 5,500 mm (220 அங்).[3]
இந்த சரணாலயம் வசோட்டா, மகர்கோர் மற்றும் இந்தாவ்லி மெட் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளுடன் அடர்ந்த காடுகளைக் கொண்டுள்ளது. மேலும் இயற்கை பாதுகாப்பு எல்லைகளுடன் உள்ளது. ஒருபுறம் சிவசாகர் ஏரியும் இருபுறமும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சரிவுகளும் உள்ளன. இந்த புவியியல் தடைகள் சரணாலயத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சரணாலயத்தின் அகன்ற, உயரம் காரணமாக, சரணாலயத்தில் உள்ள சுற்றுச்சூழல் 1,000 m (3,300 அடி) க்கும் மேற்பட்ட வட மேற்கு தொடர்ச்சி மலைகள் மழைக்காடுகளைக் கொண்டுள்ளது. வட மேற்குத் தொடர்ச்சி மலைகள் கீழே ஈரமான இலையுதிர் காடுகள். தாவரங்களில் அதிகமாகக் காணப்படும் சிற்றினங்களாக அஞ்சனி, நாவல் மரம், கிர்தா, அவலா, பிசா, ஐன், கிஞ்சல், அம்பா, கும்பம், போமா, சந்தலா, கடக், நானா, உம்ப்ரா, ஜம்பா, கெலா மற்றும் பிப்பா உள்ளன. கர்வி எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சிகேகை, கரம்பி போன்ற படர் கொடிகள் அதிகம். சில அச்சுறுத்தப்பட்ட இனங்களாக இந்தச் சரணாலயத்தில் காணப்படுபவை: பறங்கி சாம்பிராணி, நுரை மற்றும் ருத்திராட்சம் சிற்றினங்கள். கர்வண்ட், அகத்தி, ரன்மிரி, டமால்பதி, தோரன், தயாதி, கடிப்பட்டா, நர்க்யா மற்றும் முருட்ஷெங் போன்ற புதர்கள் மற்றும் மருத்துவ தாவரங்களும், சிறிய அளவு மூங்கில்களும் காணப்படுகின்றன. பருவகால தாவரங்களின் அதிக எண்ணிக்கையிலான எபிமரல் குமிழ்கள் காணப்படுகின்றன.[3]
இந்த சரணாலயத்தில் பலவகையான பாலூட்டிகள் உள்ளன. இதில் முக்கிய சிற்றினமாக வங்காளப் புலி (>6) உள்ளது. மேலும், இந்தியச் சிறுத்தை (14), இந்தியக் காட்டெருதுகவுர் (220-250), தேன் கரடி (70-80), கடமான் (160-175), கேளையாடு (180-200) மற்றும் சருகுமான், பொதுவான சாம்பல் லாங்கர்ஸ், ஆற்று நீர்நாய் மற்றும் இந்திய மலை அணில் பொதுவானவை. சரணாலயத்தில் பல வகையான பறவைகள் காணப்படுகின்றன. இதில் தனித்துவமானவை கரும்புள்ளி மரங்கொத்தி, கருஞ்சிவப்பு மரங்கொத்தி, மற்றும் சின்ன மரங்கொத்தி, ஆசியத் தேவதை நீலப் பறவை, மலபார் வெள்ளை கறுப்பு இருவாட்சி, நீண்ட வால் பக்கி மற்றும் கொன்றுண்ணி பறவை. பெரிய இந்திய மலைப்பாம்பு மற்றும் இந்திய நாகப்பாம்புகள் இங்குக் காணப்படுகின்றன. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் இங்கு மட்டுமே காணப்படும் தேரையாக, பபோ கொயனன்சிசு(அகணிய உயிரி) உள்ளது.[3]
சரணாலயத்தில் இப்போது 215 காற்றுச் சுழலி மற்றும் 10 சுற்றுலா விடுதிகள் உள்ளன. மண் அணை கட்டுவதற்காகப் பல மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சரணாலயத்திற்குள் உள்ள நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. 900க்கும் மேற்பட்ட நில பேரங்கள் 1985ஆம் ஆண்டிலிருந்து இறுதி வடிவம் பெற்றிருக்கின்றன[4]