கொரியாவில் சமயம் (Religion in Korea) பல்வேறுபட்ட மரபுகளை உள்ளடக்குகிறது. கொரியாவின் அல்லது கொரிய மக்களின் உள்நாட்டுச் சமயம் கொரியச் சாமனியம் எனும் வெறியாட்டச் சடங்குகள் ஆகும். கொரிய வரலாற்றில் பழைய நூற்றாண்டுகளில் புத்தமதம் ஓங்கியிருந்த்து. எனினும் இது யோசியோன் பேரரசில் பெரிதும் ஒடுக்கப்பட்டது. இக்காலத்தில் கொரியக் கன்பியூசனியம்அரசு சமயமாக ஆதரிக்கப்பட்டது.[1] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிவாளிகளால் யோசியோன் ஆட்சியின் இறுதிப் பத்தாண்டுகளில் கிறித்துவம் பரப்பப்பட்டது. அப்போது கன்பியூசனியச் சமூகம் வேகமாக குலையலானது.[2]
1945 ஆம் ஆண்டின் கொரியப் பிரிவினைக்குப் பின் வடகொரியாவிலும் தென்கொரியாவிலும் சமய வாழ்க்கை அரசியல் சிந்தனைக் கட்டமைப்புகளால் பெரிதும் வேறுபடலானது:
தென்கொரியாவில் சமயம் வடகொரியாவில் சமயம்