கொளத்தூர் கோபாலன் Coluthur Gopalan | |
---|---|
பிறப்பு | சேலம், தமிழ்நாடு | 29 நவம்பர் 1918
இறப்பு | 3 அக்டோபர் 2019 | (அகவை 100)
பணி | ஊட்டச்சத்து நிபுணர் |
கொளத்தூர் கோபாலன் (Coluthur Gopalan, 29 நவம்பர் 1918 – 3 அக்டோபர் 2019)[1]) ஓர் இந்திய ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் 1918 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் பிறந்தார். எப்.ஆர்.சி.பி. எனப்படும் மருத்துவர்களுக்கான இராயல் கல்லூரியில் உறுப்பினர், எப்.ஆர்.எசு. எனப்படும் இராயல் கழக உறுப்பினர், எப்.ஏ.எம்.எசு. எனப்படும் இலண்டன் மருத்துவ அறிவியல் அகாடமியின் உறுப்பினர், எப்.ஏ.எசு.சி எனப்படும் அறிவியல் கழகத்தின் உறுப்பினர் போன்ற பல பெருமைகள் இவருக்கு உண்டு. கோபாலன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மருந்தியல் பட்டமும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தத்துவப் பாடங்களில் முனைவர் பட்டமும் பெற்றார் [2][3]. இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது [4].