கொள்திறன் திட்டமிடல் (capacity planning) என்பது, ஒரு நிறுவனத்தின் மாறுபடும் தயாரிப்பு கிராக்கிகளுக்கு ஏற்றாற் போன்று தயாரிப்புக் கொள்திறனைத் தீர்மானிக்கும் ஒரு செயல்முறையாகும்.[1] கொள்திறன் திட்டமிடலின் பின்னனியில், வடிவமைப்புக் கொள்திறன் (design capacity) என்பது கொடுக்கப்பட்ட காலவரைவுக்குள் ஒரு நிறுவனம் செய்யமுடிகிற அதிகப்படியான வேலையைக் குறிக்கும். திறம்பட்ட கொள்திறன் (effective capacity) என்பது கொடுக்கப்பட்ட காலவரைவுக்குள் தாமதம், தரச்சிக்கல், பொருள் கையாளல் போன்ற புறக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒரு நிறுவனம் செய்யமுடிகிற அதிகப்படியான வேலையைக் குறிக்கும்.