கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி (Colombo Central electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த மூன்று அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் மேற்கு மாகாணத்தில், கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு நகரின் மத்திய பகுதியை உள்ளடக்கியதாகும்.
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.
1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
ஏ. ஈ. குணசிங்க | தொழிற் கட்சி | ஈருருளி | 23,470 | 23.64% |
டி. பி. ஜாயா | ஐக்கிய தேசியக் கட்சி | சக்கரம் | 18,439 | 18.57% |
பீட்டர் கெனமன் | கம்யூனிஸ்ட் கட்சி | குடை | 15,435 | 15.55% |
எம். எச். எம். முனாசு | வீடு | 8,600 | 8.66% | |
ஆயிஷா ராவுஃப் | சுயேட்சை | மரம் | 8,486 | 8.55% |
வி. ஜே. பெரேரா | யானை | 5,950 | 5.99% | |
வி. ஏ. சுகததாசா | விளக்கு | 4,898 | 4.93% | |
ஜி. டபிள்யூ. ஹரி டி சில்வா | தராசு | 4,141 | 4.17% | |
வி. ஏ. கந்தையா | மணிக்கூடு | 3,391 | 3.42% | |
எஸ். சரவணமுத்து | கதிரை | 2,951 | 2.97% | |
பி. கிவேந்திரசிங்க | கை | 1,569 | 1.58% | |
கே. தகநாயக்கா | கிண்ணம் | 997 | 1.00% | |
கே. வீரையா | சாவி | 352 | 0.35% | |
கே. சி. எஃப். டீன் | விண்மீன் | 345 | 0.35% | |
என். ஆர். பெரேரா | வண்ணத்துப்பூச்சி | 259 | 0.26% | |
செல்லுபடியான வாக்குகள் | 99,283 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 3,489 | |||
மொத்த வாக்குகள் | 102,772 | |||
பதிவான வாக்காளர்கள் | 55,994 | |||
வாக்குவீதம் | 183.54% |
24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
பீட்டர் கெனமன் | குடை | 32,346 | 27.28% | |
எம். சி. எம். கலீல் | வீடு | 25,647 | 21.63% | |
ராசிக் பரீத் | சாவி | 24,911 | 21.01% | |
ஏ. ஈ. குணசிங்க | ஈருருளி | 19,843 | 16.74% | |
பி. டி எஸ். குலரத்தின | யானை | 14,556 | 12.28% | |
பியசீலா கிவேந்திரசிங்க | கை | 751 | 0.63% | |
எச். எல். பெரேரா | விண்மீன் | 517 | 0.44% | |
செல்லுபடியான வாக்குகள் | 118,570 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 4,217 | |||
மொத்த வாக்குகள் | 122,788 | |||
பதிவான வாக்காளர்கள் | 58,400 | |||
வாக்குவீதம் | 210.25% |
5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
பீட்டர் கெனமன் | கம்யூனிஸ்ட் கட்சி | விண்மீன் | 45,296 | 30.62% |
ராசிக் பரீத் | குடை | 26,512 | 17.92% | |
எம். எஸ். தெமிஸ் | கை | 20,378 | 13.77% | |
எம். சி. எம். கலீல் | சக்கரம் | 20,338 | 13.75% | |
வி. ஏ. சுகததாச | யானை | 18,234 | 12.33% | |
ஏ. ஈ. குணசிங்க | ஈருருளி | 16,678 | 11.27% | |
ஏ. அலி முகமூது | பூ | 501 | 0.34% | |
செல்லுபடியான வாக்குகள் | 147,937 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 3,901 | |||
மொத்த வாக்குகள் | 151,838 | |||
பதிவான வாக்காளர்கள் | 70,022 | |||
வாக்குவீதம் | 216.84% |
19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
எம். சி. எம். கலீல் | ஐக்கிய தேசியக் கட்சி | கண்ணாடி | 33,121 | 19.02% |
பீட்டர் கெனமன் | கம்யூனிஸ்ட் கட்சி | விண்மீன் | 30,574 | 17.56% |
ரணசிங்க பிரேமதாசா | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 29,828 | 17.13% |
பாலா தம்பு | சாவி | 22,228 | 12.76% | |
ராசிக் பரீத் | குடை | 21,033 | 12.08% | |
எம். எஸ். தெம்ஸ் | மகாஜன எக்சத் பெரமுன | சக்கரம் | 19,093 | 10.96% |
ஈ. எஸ். ரட்ணவீர | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 11,859 | 6.81% |
அப்துல் அசீஸ் | மரம் | 4,635 | 2.66% | |
டி. ஜே. எஸ். பரணயாப்ப | விளக்கு | 414 | 0.24% | |
வசந்தா அப்பாதுரை | கப்பல் | 404 | 0.23% | |
சிசில் விக்கிரமசிங்க | கண் | 397 | 0.23% | |
ஏ. குமாரசிங்க | பூ | 220 | 0.13% | |
பிரேமரஞ்சன் லோகேஸ்வரா | மேசை | 171 | 0.10% | |
ஏ. ஏ. முகமது | சாடி | 166 | 0.10% | |
செல்லுபடியான வாக்குகள் | 174,143 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 4,592 | |||
மொத்த வாக்குகள் | 178,735 | |||
பதிவான வாக்காளர்கள் | 74,922 | |||
வாக்குவீதம் | 238.56% |
20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
ராசிக் பரீத் | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 45,342 | 25.75% |
பீட்டர் கெனமன் | கம்யூனிஸ்ட் கட்சி | விண்மீன் | 38,663 | 21.96% |
எம். சி. எம். கலீல் | ஐக்கிய தேசியக் கட்சி | கண் | 37,486 | 21.29% |
ரணசிங்க பிரேமதாசா | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 35,035 | 19.90% |
பாலா தம்பு | லங்கா சமசமாஜக் கட்சி | சாவி | 16,406 | 9.32% |
எம். எஸ். தெமிஸ் | சக்கரம் | 3,164 | 1.80% | |
செல்லுபடியான வாக்குகள் | 176,096 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 3,488 | |||
மொத்த வாக்குகள் | 179,584 | |||
பதிவான வாக்காளர்கள் | 74,922 | |||
வாக்குவீதம் | 239.69% |
22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
பளீல் கபூர் | ஐக்கிய தேசியக் கட்சி | கதிரை | 68,372 | 31.54% |
ரணசிங்க பிரேமதாசா | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 64,438 | 29.72% |
பீட்டர் கெனமன் | கம்யூனிஸ்ட் கட்சி (Moscow) | விண்மீன் | 41,478 | 19.13% |
எம். ஹலீம் இசாக் | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 32,132 | 14.82% |
பாலா தம்பு | விளக்கு | 4,559 | 2.10% | |
டி. ஏ. பியதாச | மகாஜன எக்சத் பெரமுன | சக்கரம் | 2,520 | 1.16% |
நா. சண்முகதாசன் | கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங்) | குடை | 2,427 | 1.12% |
ஓ. எஸ். ஏ. இசட். ஆப்தீன் | பூ | 332 | 0.15% | |
பூபதி சரவணமுத்து | கப்பல் | 282 | 0.13% | |
ஆர். எச். ஜெயசேகரா | தராசு | 268 | 0.12% | |
செல்லுபடியான வாக்குகள் | 216,808 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 4,638 | |||
மொத்த வாக்குகள் | 221,446 | |||
பதிவான வாக்காளர்கள் | 93,468 | |||
வாக்குவீதம் | 236.92% |
27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
ரணசிங்க பிரேமதாசா | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 69,310 | 29.48% |
பளீல் கபூர் | ஐக்கிய தேசியக் கட்சி | கதிரை | 63,624 | 27.06% |
பீட்டர் கெனமன் | கம்யூனிஸ்ட் கட்சி | விண்மீன் | 58,557 | 24.91% |
எச். ஹலீம் இசாக் | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 41,716 | 17.74% |
சி. துரைராஜா | குடை | 783 | 0.33% | |
எம். ஹரூன் கரீம் | மணி | 413 | 0.18% | |
பூபதி சரவணமுத்து | கப்பல் | 396 | 0.17% | |
பனங்காடன் இராமன் கிருஷ்ணன் | தராசு | 307 | 0.13% | |
செல்லுபடியான வாக்குகள் | 235,106 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 5,491 | |||
மொத்த வாக்குகள் | 240,597 | |||
பதிவான வாக்காளர்கள் | 99,265 | |||
வாக்குவீதம் | 242.38% |
21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
ரணசிங்க பிரேமதாசா | யானை | 94,128 | 36.32% | |
எம். ஜாபிர் ஏ. காதர் | கண் | 58,972 | 22.76% | |
எச். ஹலீம் இசாக் | கை | 53,777 | 20.75% | |
மு. ச. செல்லச்சாமி | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | சேவல் | 26,964 | 10.41% |
பீட்டர் கெனமன் | விண்மீன் | 24,568 | 9.48% | |
டபிள்யூ. ஏ. சுனில் பெரேரா | கதிரை | 422 | 0.16% | |
ஆர். ரத்னசாமி | பூ | 202 | 0.08% | |
எம். ரி. எம். சலீம் | மேசை | 103 | 0.04% | |
செல்லுபடியான வாக்குகள் | 259,136 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 6,660 | |||
மொத்த வாக்குகள் | 265,796 | |||
பதிவான வாக்காளர்கள் | 106,403 | |||
வாக்குவீதம் | 249.80% |