கோ. இபோம்சா சர்மா K. Ibomcha Sharma | |
---|---|
பிறப்பு | மணிப்பூர், இந்தியா |
மற்ற பெயர்கள் | அபிராம் சபா |
பணி | பாடகர் நிகழ்த்துக் கலைஞர் |
அறியப்படுவது | நாத சங்கீர்த்தனம் |
விருதுகள் | பத்மசிறீ சங்கீத நாடக அகாதமி விருது |
கோங்பிரைலட்பம் இபோம்சா சர்மா (Kongbrailatpam Ibomcha Sharma) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாடகரும் நிகழ்த்துக் கலைஞரும் ஆவார். மணிப்புரி நடனத்தின் ஒரு பகுதியான இராசேசுவரி பாலாவுக்கான நாத சங்கீர்த்தனம் பாடுவதில் புகழ்பெற்ற இவர் அபிராம் சபா என்ற பெயரால் நன்கு அறியப்படுகிறார்.[1] மணிப்புரி நிகழ்ச்சியில் இவரது பாத்திரம் அபிராம் சபாவாகும். கௌரா லீலா என்ற மணிப்பூரி நாடகத்தின் இயக்க வடிவம் இவருக்கு அபிராம் சபா என்ற புனைப்பெயரை சம்பாதித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.[2] சவகர்லால் நேரு மணிப்பூர் நடன அகாடமியில் முன்னாள் குருவாக இருந்தார்.[3] 1981 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார்.[4] 1998 ஆம் ஆண்டில் இந்திய அரசு நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[5]