கோ. போ. இராதாகிருஷ்ணன் | |
---|---|
![]() | |
24வது மகாராட்டிரா ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 ஜூலை 2024 | |
முன்னையவர் | ரமேஷ் பைஸ் |
ஜார்கண்ட் ஆளுநர்[1] | |
பதவியில் 18 பிப்ரவரி 2023 – 30 ஜூலை 2024 | |
முன்னையவர் | ரமேஷ் பைஸ் |
பின்னவர் | சந்தோஷ் குமார் கங்க்வார் |
தெலங்கானா ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) | |
பதவியில் 20 மார்ச் 2024 – 30 ஜூலை 2024 | |
முன்னையவர் | தமிழிசை சௌந்தரராஜன் |
பின்னவர் | ஜிஷ்ணு தேவ் வர்மா |
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) | |
பதவியில் 20 மார்ச் 2024 – 6 ஆகஸ்ட் 2024 | |
முன்னையவர் | தமிழிசை சௌந்தரராஜன் |
பின்னவர் | குனியில் கைலாசநாதன் |
தலைவர், இந்திய கயிறு வாரியம், சிறு குறு தொழில் அமைச்சகம்[2] | |
பதவியில் நவம்பர், 2014 – 2020 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1998–2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | மு. இராமநாதன் |
பின்னவர் | கே. சுப்பராயன் |
தொகுதி | கோயம்புத்தூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 அக்டோபர் 1957 திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஆர். சுமதி |
வாழிடம் | திருப்பூர் |
முன்னாள் மாணவர் | வ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி |
பணி | விவசாயம் |
கோ. போ. இராதாகிருஷ்ணன் (C. P. Radhakrishnan)(பிறப்பு 1957) என்பவர் சி. பி. ஆர். என அறியப்படுபவர் ஆவார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் கோயம்புத்தூரிலிருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டரும் ஆவார். இவர் 18 பிப்ரவரி 2023 அன்று ஜார்கண்ட் ஆளுநராக பதவியேற்றார்.
இவர் பாஜ கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் ஆவார். இவர் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கவும் வலுப்படுத்தவும் இந்த யாத்திரை ஊக்கமாக கருதப்பட்டது. தற்போது இவர் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக உள்ளார்.[3] இவர் 2016 முதல் 2019 வரை அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார்.[4] இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இராதாகிருஷ்ணன் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.[5] 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] இத்தேர்தல்களில் இராதாகிருஷ்ணன் 1998-ல் 150,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.[7]
2004 ல் திராவிட முன்னேற்றக் கழகம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முடிவுக்குக் வந்த பிறகு, கூட்டணி அமைப்பதில் பணியாற்றிய மாநிலத் தலைவர்களில் ஒருவர் இவர்.[8] இராதாகிருஷ்ணன் பின்னர் 2004 தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் உறவுகளை ஏற்படுத்த மாநில கட்சியுடன் இணைந்து பணியாற்றினார்.[9]
2012ல், மேட்டுப்பாளையத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க தொண்டரைத் தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.[10]
இவர் தெற்கு மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க.வின் மூத்த மற்றும் மதிப்பிற்குரிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். ஆர். எஸ். எஸ். மற்றும் ஜன சங்கத்துடன் 1973 முதல் தொடர்பில் உள்ளார். 2014-ல், இவர் கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாஜக வேட்பாளராகப் பெயரிடப்பட்டார். மேலும் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி இல்லாமல், இவர் 3,89,000 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றார். மீண்டும் கோயம்புத்தூரிலிருந்து 2019 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[11]
ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்குப் விகிதம் % | |
---|---|---|---|---|---|---|---|
1998 | 12 வது மக்களவை | பாரதிய ஜனதா கட்சி | கோயம்புத்தூர் | வெற்றி | 4,49,269 | ||
1999 | 13 வது மக்களவை | பாரதிய ஜனதா கட்சி | கோயம்புத்தூர் | வெற்றி | 4,30,068 | ||
2004 | 14 வது மக்களவை | பாரதிய ஜனதா கட்சி | கோயம்புத்தூர் | இரண்டாம் இடம் | 3,40,476 | ||
2014 | 16 வது மக்களவை | பாரதிய ஜனதா கட்சி | கோயம்புத்தூர் | இரண்டாம் இடம் | 3,89,701 | 33.12 | |
2019 | 17 வது மக்களவை | பாரதிய ஜனதா கட்சி | கோயம்புத்தூர் | இரண்டாம் இடம் | 3,92,007 | 31.34 |