கோ. வெங்கடேசுவரன் | |
---|---|
பிறப்பு | கோபாலரத்தினம் வெங்கடேசுவரன் மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 3 மே 2003 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 55)
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், பட்டயக் கணக்கறிஞர் |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | மணிரத்னம் (சகோதரன்) |
கோபாலரத்தினம் வெங்கடேசுவரன் (Gopalaratnam Venkateswaran) (இறப்பு 3 மே 2003), பிரபலமாக ஜிவி என அறியப்பட்ட இவர் ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் பட்டயக் கணக்கறிஞரும் ஆவார். இவர் இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளருமான மணிரத்னம் மற்றும் ஜி. சீனிவாசன் ஆகியோரின் மூத்த சகோதரர். பங்குச்சந்தை மற்றும் சுஜாதா புரொடக்ஷன்ஸ் மூலம் மூலதனத்தை திரட்டிய இந்தியாவின் முதல் திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான ஜிவி பிலிம்ஸின் விளம்பரதாரராக வெங்கடேசுவரன் இருந்தார். ஒரு நடிகராக, இவர் பகைவன் (1997) படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். பின்னர், பிரபு நடித்த ராஜா கைய வெச்சா படத்தில் வெஙக்டேசுவரனாகவே நடித்தார்.
கோ. வெங்கடேசுவரன் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களை தயாரித்த எஸ். கோபால ரத்னத்தின் மூத்த மகன். மணிரத்னம் மற்றும் ஜி. சீனிவாசன் ஆகியோர் இவரது இளைய சகோதரர்கள்.[1][2] வெங்கடேசுவரன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகம் படித்து, பட்டயக் கணக்கறிஞர் ஆனார்.[3] கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு மேலாக திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பில் இருந்தார்.[4]
ஆண்டு | திரைப்படம் | Ref. |
---|---|---|
1986 | மௌன ராகம் | |
1988 | அக்னி நட்சத்திரம் | |
1989 | குரு | |
1990 | வேடிக்கை என் வாடிக்கை | |
1990 | அஞ்சலி | |
1991 | தளபதி | |
1992 | நீங்க நல்லா இருக்கணும் | |
1994 | மே மாதம் | |
1995 | இந்திரா | |
2002 | தமிழன் | |
2002 | ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே | |
2003 | சொக்க தங்கம் |
வெங்கடேசுவரனுக்கு சுஜாதா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1] 3 மே 2003 அன்று, 55 வயதான வெங்கடேசுவரன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.[5]