படிமம்:Gokhale Memorial Girls' College.gif | |
வகை | இளங்கலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1938 |
அமைவிடம் | , , 700020 , 22°14′47″N 88°22′24″E / 22.246316°N 88.3732992°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
இணையதளம் | கோகலே நினைவு மகளிர் கல்லூரி இணையத்தளம் |
கோகலே நினைவு பெண்கள் கல்லூரி என்பது மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1938 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரியாகும்.[1] அறிவியல் மற்றும் கலைப்பிரிவுகளில் இளங்கலை பட்டங்களை வழங்கும் இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திர இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகலேவை நினைவுகூரும் வகையில் கல்லூரிக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. பழமையான கல்லூரிகளில் ஒன்றான இது, கொல்கத்தாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
சிறந்த சமூக சீர்திருத்தவாதி மற்றும் கல்வியாளர் திருமதி. பி.கே. ரே என்று பிரபலமாக அறியப்பட்ட சரளா ரேயால், கல்வியாளர் மற்றும் தேசியவாதத் தலைவரான கோபால கிருஷ்ண கோகலேவின் முற்போக்கான கொள்கைகளில் இருந்து உத்வேகம் கொண்டு வங்காளப் பெண்களை, வெறும் பெண் பட்டதாரிகளாக மட்டுமல்ல, நாட்டின் தகுதியான குடிமக்களாகவும், திறமையான நிர்வாகிகளாகவும், மனசாட்சியுடன் பணிபுரியும் நபர்களாகவும் உருவாக்க எண்ணி, 1920 ஆம் ஆண்டு இக்கல்லூரியைத் துவங்கியுள்ளார். [2]
சரளா ரேயின் தீவிர சீடரும், இக்கல்லூரியின் முதல் முதல்வருமான டாக்டர் எஸ்இ ராணி கோஷ் 1938 ஆம் ஆண்டில் இதன் தொடக்கத்திலிருந்து 18 நவம்பர் 1961 இல் அவர் இறக்கும் வரையும் சேவைபுரிந்து இக்கல்லூரியை மூன்றாண்டு பட்டப்படிப்புக் கல்லூரியாக மாற்றியுள்ளார்.
இக்கல்லூரியே, மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் உளவியலைக் கற்பிப்பதற்காக கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் இணைக்கப்பட்ட முதல் இளங்கலைக் கல்லூரியாகும். இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே, இந்த கோகலே நினைவு கல்லூரி மாணவிகளால் ஜன கண மன பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.[3]
கோகலே நினைவு மகளிர் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது[4]. மேலும் இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (என்ஏஏசி) மறு அங்கீகாரம் பெற்று பி+ தகுதி பெற்றுள்ளது.[5]