கோகிலப்பிரியா கருநாடக இசையின் 11 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) 11 வது இராகத்திற்கு கோகிலாரவம் என்ற பெயர்.
ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ப ம1 க2 ரி1 ஸ |
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | கோதண்டராமம் | முத்துசாமி தீட்சிதர் | ஆதி |
கிருதி | நேமொரபெட்டி | தியாகராஜ சுவாமிகள் | திஸ்ர திரிபுடை |
கிருதி | எவரிதோ | தியாகராஜ சுவாமிகள் | ஆதி |
கிருதி | சொன்ன நாவினிக்குது | அம்புஜம் கிருஷ்ணா | ஆதி |
கிருதி | மாணிக்க வாசகர் | முத்துத் தாண்டவர் | ரூபகம் |
கிருதி | கூவுகின்றேன் | சுத்தானந்த பாரதியார் | ஆதி |
கிருதி | சுகவாழ்வடைந்துய்வாய் | கோடீஸ்வர ஐயர் | ரூபகம் |
கோகிலப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.