மாற்றுப் பெயர்கள் | கோசம்பரி |
---|---|
வகை | பச்சைக் காய்கறி கூட்டு |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | கர்நாடகா |
முக்கிய சேர்பொருட்கள் | பருப்பு, கடுகு |
கோசம்பரி என்னும் உணவு வகை தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் சில சமூகங்களில் உண்ணப்படும் பச்சைக் காய்கறி மற்றும் பழக்கூட்டு வகை ஆகும். இது ஊறவைத்த பருப்பு வகைகளைக் (அதாவது உடைத்த பருப்பு வகைகள்) கலந்த பின்னர் கடுகு பயன்படுத்தி தாளிக்கப்படுகிறது. [1] பொதுவாகப் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகள் உடைத்த கொண்டைக்கடலை (கன்னடத்தில் கடலே பேலே) மற்றும் உடைத்த பாசிப் பயறு ( கன்னடத்தில் ஹெசரு பேலே). இந்த கூட்டு (Salad) சில நேரங்களில் சிற்றுண்டிகளாக உண்ணப்படுவதுண்டு. முழு உணவின் ஒரு பகுதியாக உண்ணுவதே .பெரும்பாலானோர் வழக்கம். தமிழ்நாட்டில் திருமணம் மற்றும் இராம நவமி போன்ற பண்டிகைகளில் மற்ற உணவு வகையுடன் உண்ணப்படுகிறது.
பொதுவாக கோசம்பரி பாசிப்பயறு, தேங்காய் துருவல், கொத்தமல்லி, மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது . விருப்பப்பட்டால் துருவிய கேரட் அல்லது பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் கலந்து கொள்ளலாம். தாளிக்க தேவைப்படுவன: எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியனவாகும்.
பாசிப் பயிரை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவல் மற்றும் கேரட். பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காயையும் பயன்படுத்தலாம். கொத்தமல்லி, மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கவும். மாம்பழக் காலத்தில் பழுக்காத மாங்காயைத் துருவி சேர்த்துக் கொள்ளலாம். தோதாபுரி வகை மாங்காய் கோசம்பரி செய்வதற்கு ஏற்றது.</br> தாளிக்க : ஒரு சிறிய கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, பெருங்காயம் (விரும்பினால்) மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். மசாலாவை ஆற விடவும். சுவைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உப்பு சேர்த்து கலக்கவும். [2] பருப்பிற்கு பதிலாக முட்டைக்கோசை பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய்க்கு பதிலாக குடைமிளகாய் போன்ற காய்களையும் பயன்படுத்தலாம்.
கோசம்பரி பண்டிகைகள், வீட்டில் நடைபெறும் பூசை, மற்றும் சிறப்பு சடங்குகளில் கலந்துகொள்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது. இது விநாயகர் சதுர்த்தி மற்றும் இராம நவமி ஆகிய பண்டிகைகளின் போது கட்டாயம் விநியோகிக்கப்படுகிறது. வரமகாலட்மி மற்றும் கௌரி பண்டிகையின் போது பெண்கள், ஒருவரையொருவர் அழைத்து, மஞ்சள் குங்குமம் மற்றும் கோசம்பரி ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுத்து கொண்டாடுவார்கள்.