கோட்டா அரிநாரயணா (Kota Harinarayana) என்பவர் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் [1] மற்றும் இந்திய வானூர்தி கழகத்தின் தலைவரும் ஆவார் [2]. இவர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பெர்காம்பூர் நகரத்தில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். தற்போது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் வாரணாசியிலுள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர் ஆவார் [3]. இங்கு இயந்திரவியலில் இளம் பொறியியலாளர் பட்டமும், இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுநிலை வானூர்திப் பொறியியல் பட்டமும், மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். சட்டப்படிப்பில் ஓர் இளம் சட்டவியல் பட்டமும் இவர் பெற்றுள்ளார். தேயாசு எனப்படும் குறைந்த எடை கொண்ட சிறியரக போர் விமானத் திட்டத்தின் இயக்குநராகவும் முதன்மை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்தார் [4].