கோட்டுரு வரைபடம் (Graph drawing) என்பது கணிதம் மற்றும் கணினியியலின் ஒரு பகுதியாகும். இது சமூக வலை பகுப்பாய்வு, நிலப்படவரைவியல், மொழியியல் மற்றும் உயிர் தகவலியல் போன்ற பயன்பாடுகளிலிருந்து எழும் கோட்டுருக்களின் இரு பரிமாண வடிவங்களைப் பெறுவதற்கு வடிவவியல் கோட்டுரு கோட்பாடு மற்றும் தகவல் காட்சிப்படுத்தல் ஆகியவற்றின் முறைகளை ஒருங்கிணைக்கும் துறையாகும். [1]