கோட்டை
Fort District | |
---|---|
அண்மைப்பகுதி | |
ஆள்கூறுகள்: 18°56′06″N 72°50′09″E / 18.935°N 72.8359°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | Mமும்பை நகரம் |
பெருநகரம் | மும்பை |
மண்டலம் | 1 |
படுதி | அ |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி (MCGM) |
ஏற்றம் | 11 m (36 ft) |
மொழிகள்s | |
• அலுவல் | மராத்தி, |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 400 001 |
மக்களவைத் தொகுதி constituency | மும்பை தெற்கு |
நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
கோட்டை ( Fort ) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு வணிக மற்றும் கலை மாவட்டமாகும். மும்பை கோட்டையைச் சுற்றி பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் கட்டப்பட்ட ஜார்ஜ் கோட்டை என்ற தற்காப்பு கோட்டையிலிருந்து இந்தப் பகுதிக்கு அதன் பெயர் வந்தது.
இப்பகுதி கிழக்கில் உள்ள கப்பல்துறைமுகத்திலிருந்து மேற்கில் ஆசாத் மைதானம் வரையிலும் வடக்கே சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் முதல் தெற்கில் கலா கோடா வரை நீண்டுள்ளது. இந்தப் பகுதி நகரின் நிதிச் சந்தைகளின் முக்கியப் பகுதியாகும். மேலும், பல பிரித்தானிய காலகட்ட கட்டமைப்புகள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.
மகாராட்டிரா அரசு நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் விதிமுறைகளின் கீழ் கோட்டைப் பகுதி பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒரு ஆலோசனைக் குழு இப்போது வளாகத்தில் உள்ள கட்டமைப்புகளின் மேம்பாடு, பழுது மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறது. 1882 ஆம் ஆண்டில், மும்பையில் கல்வியை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்த பார்சி பரோபகாரியான போமன்ஜி ஹார்மர்ஜியை கௌரவிக்க்மும் விதமாக பொது நிதியைப் பயன்படுத்தி போமன்ஜி ஹார்மர்ஜி வாடியா கடிகார கோபுரம் அமைக்கப்பட்டது. மும்பையின் கோட்டைப் பகுதி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட முதல் பகுதியாகும். பின்னர், பல ஆண்டுகளாக இது இந்தியாவின் வளமான காலனித்துவ வரலாற்றின் நினைவூட்டலாக இருந்தது. இன்று அது நகரின் கலாச்சார மையத்தின் அங்கமாக உள்ளது.[1]
2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தால் போலி மென்பொருள், ஊடகம் மற்றும் பொருட்களை விற்பனை செய்ததற்காக இது ஒரு மோசமான சந்தையாக பட்டியலிடப்பட்டது. [2] [3]