கோட்டை உரட்லா மண்டலம் (Kotauratla), ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்றாகும். [1]
இந்த மண்டலத்தின் எண் 37. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பாயகராவுபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
இந்த மண்டலத்தில் 21 ஊர்கள் உள்ளன. [3]
கோட்டை உரட்லா 17.35N 82.41E இல் அமைந்துள்ளது. [4] இம்மண்டலம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 30 மீற்றர்கள் (101 அடிகள்) உயரமாக அமைந்துள்ளது. இம்மண்டலத்தினூடக வரகா எனும் நதி பாய்கின்றது. இம்மண்டலம் 80 கிலோ மீற்றர் சதுர பரப்பளவைக் கொண்டதாகும்.