கோதாவரி தத்தா (Godawari Dutta, 1930 – 14 ஆகத்து 2024)[1] ஒரு இந்திய ஓவியர் ஆவார். இவர் மதுபானி வகை ஓவியங்களுக்காக புகழ் பெற்றவரும் மிதிலா கலா விகாஸ் சமிதியின் புரவலரும் ஆவார். இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது[2]
கோதாவரி தத்தா 1920 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள பகதூர்பூர் கிராமத்தில் பிறந்தார். ஒரு கலைஞராக இருந்த அவரது தாயார் சுபத்ரா தேவி அவருக்கு ஓவியம் கற்பித்தார். 10 வயதில் தத்தா தனது தந்தையை இழந்தார். உடன்பிறந்த மூவருடன் சேர்ந்து இவரது தாயார் இவரை வளர்த்தார். கோதாவரி தத்தா 1947 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஒரு மகனையும் பெற்றெடுத்தாா்.[3].
கோதாவரி தத்தா 1983 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி மிதிலா கலா விகாஸ் சமிதியை நிறுவினார், இது வறுமைக்கு எதிராகப் போராடுவதையும், மதுபானி வகை ஓவியத்தை ஊக்குவிப்பதையும், பெண்களுக்கு கலையில் பயிற்சியளிப்பதையும், அடிப்படைக் கல்வியை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். பின்தங்கிய சமூகங்களுக்கான திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவதில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.[4].
அவ்வாறு தத்தா கிராமப்புறப் பெண்களை மிதிலா ஓவியத்தில் ஈடுபடுத்தி நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க உதவியுள்ளார். சிறுமிகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக கிராமக் குழுவையும் அமைத்தார்.[5].
தத்தா ஆறு வயதில் சுவர்களில் ஓவியம் தீட்டத் தொடங்கி 1971 இல் இருந்து காகிதத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். கருப்பு மற்றும் வெள்ளை முரண்பாடுகளுக்கு சாதகமான மிதிலா ஓவியங்களின் கயாஷ்டா பாணியில் தத்தா நன்கு அறிந்தவர். மற்ற கலைஞர்களைப் போலல்லாமல், அவர் வண்ணம் தீட்ட மூங்கில் குச்சிகளைப் பயன்படுத்தினார்.[6].இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, அத்துடன் திருமணம் அல்லது நடனம் போன்ற அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளும் அவரது கலையின் தொடர்ச்சியான கருப்பொருளாக இருந்தது. கோதாவரி தத்தா, கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சிக்கான மையம் என்ற அரசாங்கத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.
தத்தா ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். மொத்தத்தில் அவர் ஏழு முறை ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வருடத்திற்கு ஆறு மாதங்கள் தங்கியிருந்தார்[3]. அந்த நேரத்தில் அவர் உருவாக்கிய படைப்புகளின் தொகுப்பு இப்போது ஜப்பானின் டகோமாச்சியில் உள்ள மிதிலா அருங்காட்சியகத்திற்கும்[7], ஜப்பானின் ஃபுகுயோகா ஆசிய கலை அருங்காட்சியகத்திற்கும், சொந்தமானதாக உள்ளது.[8].
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)