கோத்தா கினபாலு (P172) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Kota Kinabalu (P172) Federal Constituency in Sabah | |
கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி (P172 Kota Kinabalu) | |
மாவட்டம் | கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் மேற்கு கரை பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 74,059 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா கினபாலு |
பரப்பளவு | 26 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1966 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | சான் பூங் கின் (Chan Foong Hin) |
மக்கள் தொகை | 114,202 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Kinabalu; ஆங்கிலம்: Kota Kinabalu Federal Constituency; சீனம்: 亚庇国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P172) ஆகும்.[5]
கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கோத்தா கினபாலு மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா கினபாலு நகரம்.
சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா கினபாலு மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவை மையமாகக் கொண்டுள்ளது. கோத்தா கினபாலு மாவட்டம் 350 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது
2020-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோத்தா கினபாலு மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 5,00,425. கோத்தா கினபாலு மாவட்டத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவின் பழைய பெயர் 'ஜெசல்டன்' (Jesselton). 1890-களில் அது ஒரு மீனவர் கிராமமாக இருந்தது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் புதிய நிர்வாக மையத்திற்கு ஜெசல்டன் என்று பெயர் வைக்கப்பட்டது.[7]
கோத்தா கினபாலு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கோத்தா கினபாலு தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9] | |||
3-ஆவது மக்களவை | P109 | 1971-1973 | பாங் தெட் சுங் (Pang Tet Tshung) |
சபா சீனர் சங்கம் |
1973-1974 | பாரிசான் நேசனல் (சபா சீனர் சங்கம்) | |||
தொகுதி நீக்கம்; காயா தொகுதி உருவாக்கம் | ||||
காயா; தஞ்சோங் அரு; தொகுதிகளில் இருந்து மறு உருவாக்கம் | ||||
11-ஆவது மக்களவை | P172 | 2004-2008 | இயீ மோ சாய் (Yee Moh Chai) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய சபா கட்சி) |
12-ஆவது மக்களவை | 2008-2013 | இயூ கிங் சியூ (Hiew King Cheu) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013-2018 | வோங் சு பின் (Wong Sze Phin) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | சான் பூங் கின் (Chan Foong Hin) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சான் பூங் கின் (Chan Foong Hin) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 31,359 | 71.08 | 71.08 | |
அமண்டா யோ யான் இன் (Amanda Yeo Yan Yin) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 7,576 | 17.17 | 17.17 | |
இயீ சாய் இவ் (Yee Tsai Yiew) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 4,592 | 10.41 | 10.41 | |
வின்ஸ்டன் லியாவ் கிட் (Winston Liaw Kit) | மக்களாட்சி கட்சி (KDM) | 456 | 1.03 | 1.03 | |
மார்செல் ஜூட் (Marcel Jude) | சுயேச்சை (Independent) | 137 | 0.31 | 0.31 | |
மொத்தம் | 44,120 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 44,120 | 98.78 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 543 | 1.22 | |||
மொத்த வாக்குகள் | 44,663 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 74,059 | 59.57 | 16.69 ▼ | ||
Majority | 23,783 | 53.91 | 3.02 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)