கோத்தா கெமுனிங் | |
---|---|
Kota Kemuning | |
சிலாங்கூர் | |
![]() கோத்தா கெமுனிங் நெடுஞ்சாலை | |
ஆள்கூறுகள்: 2°59′33.8″N 101°32′27.3″E / 2.992722°N 101.540917°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கிள்ளான் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் |
மலேசிய அஞ்சல் குறியீடு | 40460 |
மலேசியத் தொலைபேசி எண் | +603-5525 |
மலேசிய போக்குவரத்துப் பதிவெண் | B |
கோத்தா கெமுனிங், (மலாய்: Kota Kemuning; ஆங்கிலம்: Kota Kemuning; சீனம்: 哥打哥文宁); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில், சா ஆலாம் மாநகருக்கு தெற்கே உள்ள ஒரு நகரம் ஆகும். இதன் கிழக்கில் கிள்ளான் ஆறு செல்கிறது.
இந்த நகரம் கோலாலம்பூர் நகர மையத்தில் இருந்து தென்மேற்கே 25 கி.மீ.; சா ஆலாம் நகரில் இருந்து 2.5 கி.மீ.; தொலைவில் உள்ளது. 1994-இல் இந்த நகரம் சா ஆலாம் மாநகராட்சிக்கு (Shah Alam City Council) மாற்றப்படும் வரையில் கிள்ளான் நகராட்சி (Klang Municipal Council) அதிகாரத்திற்குள் இருந்தது.[1]
டிஆர்பி-ஐகோம் நிறுவனம் (DRB-HICOM) மற்றும் கமுடா நிறுவனம் (Gamuda Berhad) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ஐகோம்-கமுடா மேம்பாட்டு நிறுவனத்தால் (Hicom-Gamuda Development Sdn Bhd), இந்த கோத்தா கெமுனிங் நகரம் உருவாக்கப்பட்டது.[2]
இந்த நகரமானது 1994-ஆம் ஆண்டில் ஐகோம்-கமுடா நிறுவனத்தின் (Hicom-Gamuda) வீடு மனை கட்டுமானத்தில் முதல் முயற்சியாகும். நல்ல இணக்கமான வாழ்க்கைச் சூழலில் அமையப் பெற்றுள்ள கோத்தா கெமுனிங் நகரம், கிள்ளான் பள்ளத்தாக்கின் (Klang Valley) சிறந்த குடியிருப்புகளில் ஒன்றாகப் புகழப் படுகிறது.[2]
கோத்தா கெமுனிங் நகரம், பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள் வழியாக அணுகக் கூடியது. அதாவது கேசாசு (KESAS Shah Alam Expressway)
506; வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு (ELITE North–South Expressway Central Link)
புதிய அதிவேக நெடுஞ்சாலையான கெமுனிங்–சா ஆலாம் நெடுஞ்சாலை (LKSA Kemuning–Shah Alam Highway)
ஆகியவை கோத்தா கெமுனிங் நகரத்தை இணைக்கின்றன.
SP31 KJ37 புத்ரா அயிட்சு இலகு தொடருந்து நிலையம் (LRT Putra Heights) கோத்தா கெமுனிங்கிற்கு மிக அருகில் உள்ள இரயில் நிலையம். ஆனால் தற்போது அது இல்லை. இரண்டு நகரங்களும் கிள்ளான் ஆற்றினால் பிரிக்கப்பட்டு உள்ளது.
KD10 சா ஆலாம் தொடருந்து நிலையம் (KTM Shah Alam) மிக அருகில் இருப்பதால் நேரடி அணுகல் உள்ளது. ஆகவே இன்னும் வசதியாக இருக்கும். இந்த சா ஆலாம் தொடருந்து நிலையம்; சிலாங்கூர் திறன் பேருந்து SA06 (Smart Selangor Bus) சேவையுடன் கோத்தா கெமுனிங்கை இணைக்கிறது.